கருப்பு பணத்தை தானாக முன்வந்து ஒப்படைப்பதற்கான காலக்கெடு முடிவடைந்ததையடுத்து இந்தியா முழுவதும், ஒவ்வொரு மாநிலத்திலும் கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் அதுபற்றி தானாக முன்வந்து கணக்கு விவரங்களை தெரிவித்துள்ளனர்.கருப்பு பணம் வைத்திருப்பவர்கள், அதுபற்றி தானாக முன்வந்து அதிகாரிகளிடம் கணக்குக் காண்பித்தால் சில சலுகைகள் அளிக்கப்படும், அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனவும் அவ்வாறு கருப்பு பணத்தை ஒப்படைப்பதற்கு நேற்று கடைசிநாள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பலர் தாமாக முன்வந்து ஒப்படைத்துள்ளதன் மூலம் தமிழ்நாட்டில் மாத்திரம் 42 கோடி ரூபாய் சேர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒப்படைப்பதற்கான விண்ணப்ப மனுக்களையும் பலர் வாங்கி சென்றுள்ளனர்.குறிப்பாக சென்னையில் நடிகர், நடிகைகள், பட அதிபர்கள், வர்த்தக பிரமுகர்கள் என இதுவரை 4390 பேர்கள் இதுவரை கருப்பு பணத்தை அதிகாரிகளிடம் ஒப்படைத்து உள்ளனர்.


0 கருத்துரைகள்:
Post a Comment