
பாராளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அஃப்ஸல் குரு தூக்கிலிடப்பட்டதை பாப்புலர் ஃப்ரண்ட் வன்மையாக கண்டிக்கிறது . தூக்கு தண்டனையை பல்வேறு உலக நாடுகளும் நீக்கி வரும் இவ்வேளையில் இந்தியாவின் இச்செயல் வருத்தம் அளிக்கிறது. மரண தண்டனையை பின்பற்றி வரும் வெகு சில ஜனநாயக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
அஃப்ஸல் குருவின் வழக்கில் பல்வேறு சட்ட வல்லுனர்களும் , மனித உரிமை ஆர்வலர்களும் , அறிவு ஜீவிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் . காவல்துறை விசாரணை பல்வேறு ஓட்டைகளும் குறைகளும் நிறைந்ததாக இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாதாட ஒரு வலுவான வழக்கறிஞரை கொடுப்பதற்கு அரசாங்கத்தால் இயலவில்லை.
மரண தண்டனையை உறுதி செய்த உச்சநீதி மன்றம் விசாரணையின் குறைபாடுகளை சுட்டிக்காட்டியது. ஆனால் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திபடுத்த கீழ் நீதிமன்றத்தின் ஆணையை உறுதி செய்தது. இந்திய அரசாங்கம் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருந்தால் காஷ்மீர் மக்களுக்கு சமாதானத்திற்கான நல்லதொரு செய்தியாக அது அமைந்திருக்கும்.
உணர்வுகளை கிளறிவிட்டு இந்த தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு பாசிச சக்திகள் முயற்சி செய்து வந்தனர் . உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பும் தேசத்தின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்தவே கொடுக்கப்பட்டது. இந்துத்துவ சக்திகளின் முன் அரசாங்கம் மண்டியிட்டு விட்டதை தான் இது காட்டுகிறது.
இத்தகைய செயல்பாடுகள் மூலம் இந்துத்துவ ஆதரவு வாக்குகளை பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மதச்சார்பற்ற கொள்கைகள் குறித்த சந்தேகத்தை அரசாங்கத்தின் இச்செயல் ஏற்படுத்துகிறது

0 கருத்துரைகள்:
Post a Comment