முஸ்லிம்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டுள்ள விஸ்வரூபம் படத்தை தடை செய்யக் கோரி இன்று (23.01.2013) இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் உள்துறை செயலாளரை சந்தித்து பேசினர். பின்னர் பத்திரிகைக்கு பேட்டியளித்த இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் விஸ்வரூபம் படம் தடை செய்யப்படவில்லை என்றால் போராட்டம் நடக்கும் என்று அறிவித்தனர் .
இந்நிலையில் தமிழக அரசு விஸ்வரூபம் படத்திற்கு 15 நாள் தற்காலிக தடை விதித்துள்ளது . முஸ்லிம்களின் ஒற்றுமையான முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. முன்னதாகபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா 21.01.2013 அன்று சென்சார் போர்டை முறைப்படுத்தக் கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசின் இம்முடிவை வரவேற்றுள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான், பொதுவாக, தமிழ்த் திரைப்படங்களில் தீவிரவாதிகளாக முஸ்லிம்களையும், காபரே நடனக்காரர்களாக கிறிஸ்தவர்களையும் காண்பிக்கும் போக்கு உள்நோக்கம் கொண்டதோ என்று ஐயுறச் செய்வதாகக் கூறி, அவ்வகையில் 'விஸ்வரூபம்' படத்துக்கு விதிக்கப்பட்ட தடை சரியானதே என்று தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படம் ஏற்படுத்திய சர்ச்சை, இந்தியாவுக்கு வெளியேயும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அறிவிக்கப்பட்டிருந்த பட ரிலீஸ், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தேசிய ஊடக கவுன்சில் (National Media Council), விஸ்வரூபம் படத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்று கூறி, ரிலீஸை தடை செய்துள்ளது. இந்த அமைப்புதான், எந்தவொரு படமும் அங்கு காண்பிக்கப்பட அனுமதி வழங்க வேண்டும். கிட்டத்தட்ட சென்சார் போர்டு போல!
இது தொடர்பாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தேசிய ஊடக கவுன்சிலின் Media Content Tracking Department டைரக்டர் ஜூமா ஒபாய்ட் அல்-லீமை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, படத்துக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்தார்.
“விஸ்வரூபம் படம் தொடர்பாக நாம் இன்னமும் முடிவு எடுக்கவில்லை. அதனால், படத்தை இன்று ரிலீஸ் செய்ய அனுமதியில்லை. படத்தை பார்த்தோம். கதை சில சென்சிட்டிவ்வான விஷயங்களை தொட்டுச் செல்கிறது. ஒசாமா பின் லேடன் பற்றிய பிரஸ்தாபமும், இஸ்லாமிய அமைப்புகள் பற்றிய பிரஸ்தாபமும் படத்தில் உள்ளன. குண்டுவெடிப்புகளும், கொலைகளும், இவற்றுடன் தொடர்பாக காண்பிக்கப்படுகின்றன.
இவற்றை மீளாய்வு செய்ய எமக்கு கால அவகாசம் தேவை. எமது குழுவினர் வரும் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஒருதடவை இந்தப் படத்தை பார்த்தபின் முடிவு எடுப்போம்” என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment