Thursday, January 24, 2013

காவி பயங்கரவாதம்: தொடரும் காங்கிரசின் கோழைத்தனம்!

janardan dwivedi

புதுடெல்லி:இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் காவி ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் தொடர்பு குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியன தீவிரவாத முகாம்களை நடத்துவது குறித்தும் ஜெய்ப்பூர் காங்கிரஸ் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே தோலுரித்துக் காட்டினார்.
ஏற்கனவே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் காவி பயங்கரவாதம் குறித்து பேசியிருந்தார். ஷிண்டேவின் கருத்தை தொடர்ந்து பா.ஜ.க உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளும், தினமணி போன்ற பார்ப்பன வெறி ஏடுகளும் தாம் தூம் என்று குதித்து ஹிந்துத்துவா தீவிரவாதம் குறித்து பேசுவது தேசத் துரோகம் போல சித்தரித்தன.

இந்நிலையில் வழக்கம் போலவே அரசியல் பின்னடைவு குறித்து கவலைப்படும் அல்லது மென்மையான ஹிந்துத்துவாவை கடைப்பிடிக்கும் கேடுகெட்ட காங்கிரஸ் கட்சி ஷிண்டேவின் துணிச்சலான கருத்துக்களுக்கும் தமக்கு சம்பந்தம் இல்லை என்று பல்டி அடித்துள்ளது.
இதுக்குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பயங்கரவாதத்தை எந்தவொரு மதத்துடனும் தொடர்புபடுத்த முடியாது. மதத்தையும், பயங்கரவாதத்தையும் காங்கிரஸ் என்றுமே இணைத்துப் பார்த்ததில்லை. மதத்துக்கு நிறமோ அல்லது மதமோ கிடையாது என்று காங்கிரஸ் எற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
காவிப் பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் போன்ற வார்த்தைகளை காங்கிரஸ் ஒருபோதும் பயன்படுத்தாது.  ஹிந்து பயங்கரவாதம் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே குறிப்பிட்டதில் உள்நோக்கம் எதுவும் இருக்க முடியாது.
சில சமயங்களில் உள்நோக்கமின்றி, ஒருவரின் வாயிலிருந்து தவறுதலாக சில வார்த்தைகள் வெளிப்பட்டு விடுவதுண்டு.அதுபோல் தான் இதுவும். இந்தப் பிரச்னை இப்போதே முடிவுக்கு கொண்டுவரப்படுவது அவசியமாகும். இந்த விவகாரத்துக்காக காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டுவது சரியானதல்ல என்று கூறினார்.
ப.சிதம்பரம் காவி தீவிரவாதம் குறித்து முன்னர் உண்மையை வெளிப்படுத்திய போதும் காங்கிரஸ் இதனைத்தான் செய்தது. ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து சிறையில் தள்ளுவதில் ஆர்வம் காட்டும் காங்கிரஸ் கட்சியின் போக்கால் நாடு மிகப்பெரும் அபாயத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza