Wednesday, January 23, 2013

பயங்கரவாதத்திற்கு எந்த மதமும் இல்லை- ஷிண்டே கருத்துக்கு குர்ஷித் ஆதரவு!



பாரதிய ஜனதாவும் அதன் தாய் அமைப்பான ஆர் எஸ் எஸ்ஸும் பயங்கரவாத பயிற்சி முகாம்களை நடத்துகின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், உள்துறை அமைச்சரின் இந்தக் கருத்து சரியே என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் கூறியுள்ளார்.

இந்து அமைப்புகளும், பாரதிய ஜனதாவும் சுஷில் குமார் ஷிண்டே யின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், "உள்துறை அமைச்சர் கூறியுள்ள கருத்து உண்மை தான். புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசாரணையில் தெரியவந்த உண்மைகளைத் தான் அவர் கூறினார். புலனாய்வு அமைப்புகள், மத்திய அரசுக்கு தெரிவித்த தகவல்களை, உள்துறை அமைச்சர் என்ற முறையில் அவர் வெளிப்படுத்தினார். இந்தப் பிரச்னையை திசை திருப்பும் வகையில், பாரதிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள், தேவையற்ற கருத்துக்களை கூறி வருகின்றன" என்று வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் தெரிவித்துள்ளார்..

அவர் மேலும் கூறுகையில், "என்னை பொறுத்தவரை, பயங்கரவாத அமைப்புகளுக்கு, எந்த மதமும் இல்லை; இதை தெளிவாகவே கூறுகிறோம்.இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை முறியடிப்போம். இதில், எந்த சந்தேகமும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

source: inneram

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza