Tuesday, January 22, 2013

சென்சார் போர்டை முறைப்படுத்தக் கோரி சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்



சென்னை : நூறாண்டுகளை கடந்து நிற்கும் இந்திய சினிமா வரலாற்றில் சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக பல திரைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இஸ்லாம் மார்க்கத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாகவும், முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் போக்கும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இத்தகைய செயல்கள் சிறுபான்மை சமூக மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.

நூறாண்டுகளை கடந்து நிற்கும் இச்சினிமாத்துறையை ஒழுங்கு படுத்துகின்ற பொறுப்பு திரைப்பட தனிக்கை குழுவிற்கும் உண்டு. ஆனால் சிறுபான்மை சமூக மக்களை புண்படுத்தும் விதமாக எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு தடைவிதிக்காமல் அதனை கண்டும் காணாமல் விட்டு விடுவது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.

எனவே முஸ்லிம்கள் விஷயத்தில் செயலற்றுக் கிடக்கும் திரைப்பட தணிக்கைகுழுவை முறைப்படுத்தக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 21.01.2013 அன்று மாலை 4.30 மணியாளவில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஜீம் தலைமை தாங்கினார் . பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ருதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மத்திய அரசு சென்சார் போர்டை முறைபடுத்த வேண்டுமென கோஷமிட்டனர் .

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் ஜே.முஹம்மது நாஜீம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஏ.காலித் முஹம்மது


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ருதீன்

 

கலந்து கொண்ட மக்கள் கூட்டம்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza