ஹமாஸ் அமைப்பின் கட்டுபாட்டில் உள்ள காஸா பகுதிக்கு மலேசிய பிரதமர் நஜீப் ரஜாக் இந்த வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மலேசிய பிரதமர், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் அடங்கிய குழு செவ்வாய் கிழமை காஸா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியா நீண்ட காலமாக ஃபலஸ்தீனத்துடன் நெருங்கிய நட்புறவை பேணி வருவதோடு, இஸ்ரேலுடன் ராஜதந்திர உறவை கடைபிடிக்காத நாடாகும். கடந்த நவம்பரில் கஸா மீதான தாக்குதலுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்த மலேசிய பிரதமர் நஜீப், அந்த தாக்குதலை ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை என்றார்.
அத்துடன் ஃபலஸ்தீனத்திற்கு எந்த வகையான உதவியையும் வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
source: jaffna muslims
0 கருத்துரைகள்:
Post a Comment