Tuesday, December 11, 2012

YouTubeக்கு போட்டியாக, ஈரானிய அரசு புதிதாக தொடங்கியுள்ள வெப்சைட்!


மேற்கத்திய நாடுகளின் பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் ஆகிய வெப்சைட்களில் இஸ்லாமியத்துக்கு எதிராக பல தகவல்கள் வெளிவருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் ஈரானிய அரசு, யூ டியூப்க்கு போட்டியாக புதிய வெப்சைட் ஒன்றை ஆரம்பித்துள்ளது. பேஸ்புக், டுவிட்டர், யூ டியூப் ஆகிய வெப்சைட்கள் ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளன.

யூ டியூப் ஈரானில் தடை செய்யப்பட்டுள்ளதால், இந்த புதிய வெப்சைட்டுக்கு உடனடியாக செல்வாக்கு ஏற்படும் என ஈரானிய அரசு நம்புகிறது.


இந்த வெப்சைட்டில், ஈரானியர்களுக்கு தேவையான தகவல்கள், இஸ்லாமிய கலாசாரம், கலைஞர்கள் போன்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன. வெளியாட்கள் இங்கும் இஸ்லாமியத்துக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்யாமலிருக்க, இந்த வெப்சைட்டை தொடர்ந்து கண்காணித்து வருவோம், சென்சார் செய்வோம் என்று ஈரான் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரானிய அரசு, யூ டியூப்க்கு போட்டியாக தொடங்கியுள்ள புதிய வெப்சைட் www.mehr.ir என்ற பெயரில் இயங்குகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza