கூடங்குளம் அணுஉலைக் கெதிரான கூட்டமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் பேராதரவுடன் நடைபெறும் இப்போராட்டத்திற்கு SDPI கட்சி தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் சர்வேதேச மனித உரிமை தினமான( டிசம்பர் 10 ம் தேதி ) இன்று அணுஉலைக்கு எதிராகவும், காவல்துறையின் அடக்குமுறையை கண்டித்தும் நாகர்கோவில் மற்றும் மதுரையில் மாபெரும் சாலை மறியல் போராட்டம் இன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு SDPI யின் மாநில செயலாளர் செய்யது அலி தலைமையில் SDPI கட்சியின் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
மதுரையில் மாவட்டத் தலைவர் ஜாபர் சுல்தான் தலைமையில் ஏராளமான SDPI தொண்டர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.
0 கருத்துரைகள்:
Post a Comment