Tuesday, December 4, 2012

பாபர் மஸ்ஜித் விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் SDPI யில் இணைந்தனர்.


 நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் SDPI சார்பாக பாபர் மசூதி இடிப்பு விழிப்புணர்வு பொதுக்கூட்டமும் பிற கட்சியினர் SDPI யில் இணையும் விழாவும் 2.12. 2012 அன்று மாலை 7 :30 மணிக்கு தொடங்கியது .
கூட்டத்திற்கு நகரத் தலைவர் மின்னதுல்லாஹ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஜிந்தா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை தலைவர், அம்பை தாவுத், நாசிர் கான், சாகுல் ஹமீது உஸ்மான் ஆகியோர் அறிமுக உரை நிகழ்த்தினர். மாவட்ட செயலாளர் பாலை ஹயாத், ஏர்வாடி ஹபிப் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . மாநில செயலாளர் K.S.செய்யது இப்ராஹீம் பாபர் மசூதியின் வரலாறு குறித்து சிறப்புரையாற்றினார். SDPI மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி SDPI பணிகள், பாபரி வரலாறு, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது குறித்து சிறப்புரையாற்றினார். பாலை தொகுதி தலைவர் அப்துல் ஹமீது நன்றி கூறினார்.

       கூட்டத்தில் த.மு.மு.க அமைப்பின் முன்னாள் மாவட்ட செயலாளர் உஸ்மான் கான் தனது 100 க்கும் மேற்ப்பட்ட ஆதரவாளர்களுடன் மாநில தலைவர் முன்னிலையில் SDPI யில் இணைந்தார், இதே போன்று தூத்துக்குடி சங்கு வியாபாரிகள் சங்க தலைவர் ஜமால் தனது ஆதரவாளர்களுடன் மாநில தலைவர் முன்னிலையில் SDPI யில் இணைந்தார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் SDPI யின் தொழில் சங்கமான SDTU சார்பில் ஆட்டோ ஓட்டுனர் சங்க கிளை மாநில தொழில் சங்க பொறுப்பாளர் நாஞ்சில் செய்யதலி தலைமையில் திறந்து வைக்கப்பட்டது .
                     

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza