கோவை : நவ – 30,2012 , கோவையில் மரணப்படுக்கையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசி அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்திட வேண்டி வலியுறுத்தியும் கோவையில் அனைத்து இஸ்லாமிய இயக்க கூட்டமைப்புகள் சார்பில் மாபெரும் போராட்டம் நடந்தது. இதில் 3000 க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர் .
கோவை மத்திய சிறையில் 15 ஆண்டு காலமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் அபுதாஹீர் கடந்த 5 ஆண்டுகளாக SLE (Syetemic Lupus Erythematosus) எனும் அறிய வகை நோயால் தாக்கப்பட்டுள்ளார். இதன் கொடூர தன்மை என்னவெனில் இந்த நோய் இலட்சத்தில் ஒரு நபருக்கு வரக்கூடிய நோய்.இந்த நோய் தாக்கியவரின் ஒவ்வொரு உள் உறுப்புகளையும்செயல் இழக்க செய்து மரணத்தை உண்டாக்கும் கொடிய வகை நோயாகும். இதன் பாதிப்பால் சிறையில் போதிய மருந்து வசதி இன்றி சித்ரவதைகளை அனுபவித்து வருகின்றார். இவருக்கு போதிய மருத்துவத்திற்காக இதுவரை கடந்த ஆட்சியில் , அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி 90 நாட்கள் சிறப்பு அனுமதி பெற்று பரோலில் வெளியே வந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இத்தனை ஆண்டு காலமாக நோயின் கடுமையை தாக்குப் பிடித்தார்.
SLE நோயின் பாதிப்பால் இரண்டு சிறுநீரகமும் பாதிக்கப்பட்டு அதனை தொடர்ந்து அவருடைய இருதயம் பாதிப்புக்குள்ளானது. இதனை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு மீண்டும் அவருக்கு 90 நாட்கள் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து நோயின் கடுமை அதிகரித்து அவருடைய ஒவ்வொரு உறுப்பாக செயல் இழக்க ஆரம்பித்ததை தொடர்ந்து மீண்டும் அவருக்கு விடுதலை வழங்க வேண்டுமென கோரிக்கை வைக்கும் பொழுது அரசு அக்கோரிக்கையின் அடிப்படையில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு அந்த மருத்துவ குழு விடுதலைக்கு சாதகமாக அறிக்கை அளித்தது. இருந்த போதும் வட்டாட்சியர் , மாவட்ட காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோரின் அறிக்கை விடுதலைக்கு பாதகமாக அளிக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து அவருக்கு பரோல் நீடிப்பு தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இதனை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் கடந்த 30-8-12 அன்று முதல் அபுதாஹிரை பரோலில் விட தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது.(W.P. No. 9331 of 2012) நீதிமன்ற உத்தரவினை அமல்படுத்தாமல் இவ்வரசு உத்தரவுக்கு மேல் முறையீடு செய்து அவரது பரோலை முடக்க முயற்சித்தது. ஆனால் உயர் நீதிமன்றம் அரசின் மேல் முறையீட்டு மனுவை 14-9-2012 அன்று தள்ளுபடி செய்தது.தமிழகத்தின் உயர் அதிகாரமுடைய உயர் நீதிமன்றத்தின் உத்தரவை இன்று வரை நடைமுறைப்படுத்தாமல் அரசு புறக்கணித்து வருகிறது.
தற்போது அந்த சகோதரனின் இரண்டு சிறுநீரகமும் முழுவதும் பழுதடைந்து விட்டதால் இனி அவர் வாழ்நாள் முழுவதும் டயாசிஸ் செய்துதான் ஆகா வேண்டுமென்று மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மரணத்தின் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இந்த சிறைவாசியின் மீது அரசிற்கு ஏன் இந்த பாரபட்சம். அவரின்பரோலும் விடுதலையும் அவரை குணப்படுத்துவதற்காக அல்ல. அவரின் உயிரை பாதுகாக்க தான். இதனை அரசு நன்றாக அறிந்திருந்தும் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக இரக்கம் காட்ட மறுக்கிறது . இதற்கு ஒட்டு மொத்த சமூகமும் குரல் கொடுக்க வேண்டும். இது தனி மனிதனுக்கு இழைக்கும் அநியாயம் அல்ல. இது ஒரு சமூகத்திற்கு இழைக்கப்படும் அநியாயம். இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும்ஜமாத்துகளும் ஒன்றிணைந்து இவருடைய விடுதலைக்காக தொடர்ந்து போராடும். இதன் முதல் கட்ட போராட்டமாக கோவையில் செஞ்சிலுவை சங்கம் முன்பு 30-11-12.,வெள்ளிகிழமை அன்று மாலை 4:30 மணிக்கு மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில பேச்சாளர் கோவை ஜாகீர், மனித நேய மக்கள் கட்சி சார்பாக கவுன்சிலர் கோவை சாதிக் அலி ,எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் வி.எம்.அபுதாஹீர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா மாவட்ட தலைவர் எ.முஹம்மது இபுராஹிம், இந்தியன் தவ்ஹீத் ஜமாத் மாநில செயலாளர் அப்துல் காதர் மன்பஈ ,சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொறுப்பாளர் சம்சுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் .
மேலும் இதில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட தலைவர் இபுராஹிம் பாதுஷா, மாவட்ட செயலாளர்கள் ஷாநாவஸ், ஜலீல்,அலிபாய்,ஊடக பொறுப்பாளர் ஹக்கீம், சாகுல் ஹமீது, மனித நேய மக்கள் கட்சி தொழில் சங்க மாநில செயலாளர் சுல்தான் அமீர்,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் அகமது கபீர், மாவட்ட பொருளாளர் அஜ்மீர் கான், துனை தலைவர் அக்பர் அலி,செயலாளர்கள் நிஷார், ஹருன் பாஷா,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் பஷீர், எஸ்.டி.பி.ஐ மாவட்ட தலைவர் முஸ்தபா,மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல் காதர்,மாவட்ட நிர்வாகிகள் அசரப், அன்சர் உசேன்,அப்பாஸ்,அனீஸ் ரஹ்மான்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அப்துல் கபூர்,மாவட்ட செயலாளர் முஹம்மது பசீர், புறநகர் செயலாளர் இபுராஹீம்,மாவட்ட நிர்வாகி யாகூப் ஹாஜியார்,பி.கே சலாம்,ஷிப்லி, ஜமாத்தே இஸ்லாமிக் ஹிந்த் மாவட்ட தலைவர் உமர்பாருக்,மக்கள் தொடர்பு பொறுப்பாளர் கோவை ஹக்கீம் , நிர்வாகிகள் ஷேக் அப்துல்லா,அபுதாஹீர், வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான்,சாகுல் ஹமீது, மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஷாஜகான், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநகர தலைவர் ஹைதர் அலி,மற்றும் நிர்வாகிகள் பாருக், நாசர், ஷாநாவஸ், சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் புகாரி, கலீல் ரஹ்மான்,அபுதாஹீர்,சுலைமான்,மற்றும் அனைத்து இயக்க கூட்டமைப்பின் மாவட்ட நிர்வாகிகள்,நகர ,கிளை ,அணிகள், நிர்வாகிள், பெண்கள் பொது மக்கள் உள்பட 3000 பேர் கலந்து கொண்டார்கள்.இந்த நிகழ்வுகளை சிறுபான்மை உதவி அறக்கட்டளை பொறுப்பாளர் எம்.எஸ்.எம் அபூதாஹீர் தொகுத்து வழங்கினர்.
0 கருத்துரைகள்:
Post a Comment