Friday, December 21, 2012

தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு நிரந்தர வெற்றி அல்ல-SDPI மாநில தலைவர்



எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குஜராத் , ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி தோல்வியை தழுவியுள்ளது.. பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. 
அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தி ஆட்சியை பிடிக்கலாம் என்று எண்ணிய பாரதிய ஜனதா கட்சிக்கு இந்த தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஒன்றை இழந்துள்ளது. 

குஜராத் சட்டசபை தேர்தலில் எல்லோரும் எதிர்பார்த்தது போலவே மோடி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார். குஜராத் வெற்றி என்பது மோடிக்கும், பா.ஜ.க விற்கும் கிடைத்த வெற்றியாக இதை கருத முடியாது. 
காரண ம், கடந்த கால ஆட்சியில் இருந்த மோடி மீண்டும்ஆட்சியைதக்கவைத்துக்கொண்டாலும்,காங்கிரஸ் கட்சி சில தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது. 

மோடியை எதிர்க்க குஜராத் மாநில காங்கிரஸ் கட்சிக்கு வலுவான தலைமை இல்லாததும், பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மத்திய தலைமை போதிய கவனம் செலுத்தாதும்,குஜராத்தில் அதிகார வர்க்கம் காவிமயமானதும், பிரச்சாரத்திற்கு பாஜக செலவு செய்த கோடிக்கணக்கான ரூபாய்களும், மேலும் மோடி பிரதமர் வேட்பாளராக தகுதி படைத்தவர் என்ற பிரச்சார யுக்தியும் மோடியின் வெற்றியை உறுதி செய்துள்ளது. 



பல்வேறு கலவரங்களுக்கு காரணமாக கருதப்படுகின்ற நரேந்திர மோடிக்கு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை குஜராத் மக்கள் வழங்கியுள்ளார்கள். மோடியை எதிர்த்து போட்டியிட்ட மோடியால் பாதிக்கப்பட்ட சஞ்சீவ் பட் மனைவி ஸ்வேதா பட் படு தோல்வி அடைந்துள்ளார். குஜராத் மக்களிடம் மதவாத நஞ்சு எவ்வாறு விதைக்கப்பட்டுள்ளது என்பதற்கு இந்நிகழ்வு ஓர் உதாரணம். 
மோடியால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மோடி ஆட்சிக்கு வருவதை கண்ணீரோடும் வேதனையோடும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .தேசிய நலன், மனித உரிமை ஆகிய விஷயத்தில் அக்கரை கொண்ட குடிமக்கள் கவலையோடு சிந்திக்க வேண்டிய விஷயம் இது .



மேலும் குஜராத்தில் மோடி ஆட்சியை தக்கவைத்துக்கொண்டார் என்று முன்னிலை படுத்தக் கூடியவர்கள் இமாசல் பிரதேசத்தில் பா.ஜ.க வின் தோல்வியை முற்படுத்த தயங்குவது ஏன்? பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளர் போட்டிக்கு மோடி தேர்வாகி விட்டதாக கருதுவதால் இனி பாரதிய ஜனதா கட்சியிலும்,அதன் கூட்டணியிலும் மோதலும்,பிளவுகள் ஏற்பட போவதை காண தயாராகலாம்.மொத்தத்தில் இந்த தேர்தல் முடிவுகள் பா.ஜ.க கட்சியின் வெற்றி கொண்டாட்டத்திற்கு உரிய செய்தி அல்ல என்பதனை தெரிய படுத்திக்கொள்கிறேன் .இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza