Monday, December 3, 2012

தருமபுரி வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம் -SDPI மாநிலத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி பங்கேற்பு!



தர்மபுரி மாவட்டத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடை பெற்ற சாதிய வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டன.தருமபுரி வன்முறைக்கு எதிராக பல்வேறு அமைப்புகளும் களத்தில் குதித்துள்ள நிலையில் விடுதலைக் குயில்கள் சார்பாக தருமபுரி வன்முறைக்கு எதிரான கருத்தரங்கம் இன்று (01-12-2012 )சனிக்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பல்வேறு எழுத்தாளர்களும்,சமூக ஆர்வலர்களும், களத்தில் கண்ட நேரடிக்காட்சிகளை விவரித்தனர். இக்கருத்தரங்கில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாக்கவி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,சுப.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Mஃஅ பீமாராவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மு.வீரபாண்டியன், கவிஞர் ம.மதிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை நிகழ்த்தினார்கள்.

எஸ்.டி .பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெஹ்லான் பாக்கவி தமது உரையில் தருமபுரி மாவட்டத்தில் ஏற்பட்ட சாதிய வன்முறை என்பது தமிழகத்தில் இறுதியானதாக இருக்கட்டும். சாதி என்ற பெயரில் மனிதம் அழிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. தருமபுரி மாவட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனை தொடர்ந்து தருமபுரி வன்முறை சம்பந்தமான எஸ்.டி.பி.ஐ கட்சியின் நேரடி கள ஆய்வறிக்கையை திரு.சுப.வீரபாண்டியன் வெளியிட திரு.தொல்.திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வடசென்னை மாவட்டதலைவர் எஸ்.அமீர் ஹம்ஸா, மாநில செய்தி ஊடகத்துறை பொறுப்பாளர் செய்யது இப்ராஹீம் கனி, எழுத்தாளர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட எழுத்தாளர்களும், நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza