Sunday, December 9, 2012

இந்தியர்களில் 90 % பேர் முட்டாள்கள் : மார்க்கண்டேய கட்ஜூ வருத்தம்



இந்தியர்களின் 90 சதவீத மக்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள் என்று இந்திய ஊடகக் குழுமத் தலைவரும் முன்னாள் தலைமை நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜூ  வருத்தமாக விமர்சித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவொன்றில் வருத்தம் தொனிக்கப் பேசிய முன்னாள் நீதிபதி,  இந்தியர்களில் 80 சத ஹிந்துக்களும், 80 சத முஸ்லிம்களும் வகுப்புவாதக் கொள்கையை கைக்கொண்டுள்ளனர் என்றார் . "நான் சொல்வது கசப்பானதும், முரட்டுத்தனமானதுமாக  இருக்கலாம். ஆனால் உண்மை" என்றார் மார்க்கண்டேய கட்ஜு. "1857-ஆம் ஆண்டுக்கு முன்னால், இந்தியாவில் வகுப்புவாதம் இருந்தது கிடையாது. ஆனால், தற்போதைய நிலவரம் வேறுமாதிரியாகி விட்டது" என்றும் அவர் நினைவு கூர்ந்தார். "இந்தியர்களுக்கு மூளையே கிடையாது"


1857-க்குப் பிறகு 150 ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும் நாம் இன்னும் முன்நோக்கி செல்லாமல், பின் நோக்கியே போய்க் கொண்டிருக்கிறோம். இந்தியமக்கள் அறிவார்ந்து சிந்திப்பதில்லை, உங்கள் மீது ஏறி சவாரி செய்வது தீய சக்திகளுக்கு வசதியாக இருக்கின்றது. கையில் 2 ஆயிரம் ரூபாய் இருந்தால், டெல்லியில் ஒரு மதக் கலவரத்தை ஏற்படுத்தி விடலாம் என்ற நிலை இப்போது உள்ளது என்று நிதர்சனம் உரைத்தார் கட்ஜு.

"எந்த விவகாரத்திலும் பின்னணியில் இருக்கும் சக்தி / அரசியல் எது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்படி புரிந்துகொண்டு விட்டால் மக்களாகிய நம்மை யாரும் முட்டாளாக்க முடியாது.  நாம் இன்னும் முட்டாள்களாகவே இருக்கக்கூடாது என்கிற கசப்பான, முரட்டுத்தனமான கருத்தைக் கூறுவதற்குக் காரணம், நாட்டு மக்களாகிய உங்களை நான் நேசிக்கிறேன்" என்பதால் தான் என்றார் மார்க்கண்டேய கட்ஜூ.

"ஹிந்தி என்பது ஹிந்துக்களின் மொழி; உருது என்பது முஸ்லிம்களின் மொழி என்கிற பொய்ப் பிரச்சாரத்துக்கும் நாம் பலியாகிவிட்டோம்; அப்படியெல்லாம் இல்லை" என்றும் அவர் சொன்னார்.

source: inneram.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza