Sunday, December 9, 2012

அதிரையில் அவதூறு பரப்பியதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் :SDPI கட்சியின் மாநில செயலாளர் அப்துல் சத்தார் கடிதம்:


             இறைவனின் திருப்பெயரால் . . .
பெறுநர் :
ஆசிரியர் – வெளியீட்டாளர்
உணர்வு வார இதழ்
C/O:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
என்:30 அரண்மனை காரன் தெரு
சென்னை -1
பொருள் : பொய் செய்திக்கான மறுப்பு.
ஆசிரியர் அவர்களுக்கு,
       தங்களின் உணர்வு நவம்பர் 30 – டிசம்பர் 06 தேதியிட்ட வார இதழில், ‘அதிரையில் பயங்கரம் கல்லூரி மாணவன் படுகொலை SDPI யைச் சேர்ந்தவர் வெறிச் செயல்’ என்ற தலைப்பில் ஒரு அவதூறு செய்தியை வெளியிட்டுள்ளீர்கள். கொலையாளி என கைது செய்யப்பட்டுள்ள காதர் முகைதீன் என்பவர் SDPI கட்சியின் உறுப்பினராகவோ, செயல்வீரராகவோ, நிர்வாகியாகவோ இல்லாத நிலையில் SDPI கட்சியின் மீது அவதூறு பரப்பும் கெட்ட நோக்கோடு பொய் செய்தியை வெளியிட்டுள்ளீர்கள்.

இரு தனி நபர்களுக்கு மத்தியில் நடைபெற்ற முன் விரோத மோதல் – கொலையாக முடிந்துள்ளது வருத்தத்திற்குரியது. கண்டிக்கத்தக்கது. ஆனால் இதை கட்சியோடு சம்பந்தப்படுத்தி ஆதாயம் தேட முயலும் தங்களின் செயலை கண்டிக்கிறேன். இந்த மறுப்பு செய்தியை தங்களின் வரும் உணர்வு இதழில் முழுவதுமாக அப்படியே வெளியிட வேண்டும். அதோடு அவதூறு செய்தி வெளியிட்டதற்கு தாங்கள் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படிக்கு
எ.அப்துல் சத்தார்,
மாநில செயலாளர்,
SDPI கட்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza