Tuesday, December 25, 2012

குஜராத் தேர்தலில் பெய்ட் நியூஸ் அதிகம்! – பிரஸ் கவுன்சில்



புதுடெல்லி:குஜராத் தேர்தலில் கையூட்டு வாங்கிவிட்டு செய்தியை வெளியிடும் பெய்ட் நியூஸ் அதிகம் நடந்துள்ளதாக ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா(பி.சி.ஐ)வின் உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்துள்ளது.
இந்த அறிக்கை அதிர்ச்சி அடையச் செய்வதாகவும், ஊடகங்கள் சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டாலே இதனை தடுக்க முடியும் எனவும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். பி.சி.ஐ உறுப்பினர் ராஜீவ் ரஞ்சன் நாகின் தலைமையிலான குழு ஒன்று, குஜராத்தில் பெய்ட் நியூஸ் சம்பந்தமான புகார்களின் விசாரணைக்கு நியமிக்கப்பட்டது. பத்திரிகைகளில் மட்டுமல்ல, சானல்களிலும் பெய்ட் நியூஸ் கலாச்சாரம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

முழுமையான அறிக்கை கிடைத்த பிறகு தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் கமிஷனையும், இதர அதிகாரிகளையும், பொதுமக்களையும் அணுகுவோம் என்று கட்ஜு தெரிவித்தார். ஊடகங்களை கட்டுப்படுத்த ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு கூடுதல் அதிகாரங்கள் தேவை என்ற தனது கோரிக்கையை நியாயப்படுத்தும் விதமாக விசாரணையின் முடிவு அமைந்துள்ளது என்று கட்ஜு கூறினார்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza