Tuesday, December 25, 2012

பாடப்புத்தகங்களில் காவி மயம்!




புதுடெல்லி:கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க அரசு பள்ளிக்கூட பாடப்புத்தகங்களை காவி மயமாக்கியது தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்துகிறது. பிஞ்சு உள்ளங்களை வகுப்புவாத நஞ்சை விதைக்க பா.ஜ.க நடத்திய முயற்சிகள் குறித்து என்.சி.இ.ஆர்.டி விசாரணை நடத்த உள்ளது.பாடப்புத்தகங்கள் குறித்து ஏராளமான புகார்கள் வந்ததையடுத்து விளக்கம் கேட்டு என்.சி.இ.ஆர்.டி தலைவர் பர்வீன் சின்க்ளெயர், பள்ளிக்கூட கல்வி செயலாளருக்கும் , டி.சி.ஆர்.டி தலைவருக்கும் கடிதம் எழுதியுள்ளார். அடுத்த புதன்கிழமைக்குள் டி.சி.ஆர்.டி தலைவர் ஹெச்.எஸ்.ராமராவுடன் என்.சி.இ.ஆர்.டி கவுன்சில் விவாதிக்கும்.

இவ்வாண்டு ஜூலையில் வெளியான ஐந்தாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தில் ஹிந்துத்துவா சக்திகள் வரலாற்றை வளைத்துள்ளனர். எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடத்திட்டத்தின் ஒரு அத்தியாயத்தில் வேதகாலங்களிலேயே பசுவதை அமலில் இருந்தது என கூறப்பட்டுள்ளது.

ஆனால், வேத காலத்தில் பசு இறைச்சி சாப்பிட்டனர் என்பதற்கும், அதற்கான பிரச்சாரம் நடந்துள்ளது என்பதற்கும் ஆதாரங்கள் உள்ளன. ஆரிய நாகரீகமும், ஹரப்பா நாகரீகமும் ஒன்று தான் என்று எட்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற வரலாற்று உண்மையை மூடிமறைத்துவிட்டு அவர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று வடிகட்டிய பொய்யை நியாயப்படுத்துவதற்கான முயற்சியாகும். கார்ட்டூன் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக என்.சி.இ.ஆர்.டி பல்வேறு சர்ச்சைகளை சந்தித்துவரும் சூழலில் காவிமயமாக்கல் தொடர்பான குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza