வடிகான் சிட்டி:மனித படைப்பின் நோக்கத்தையே தகர்ப்பதுதான் ஓரினச் சேர்க்கை திருமணம் என்று போப் ஆண்டவர் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியை தெரிவிக்கும் வேளையில் அவர் ஓரினச்சேர்க்கைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வெளியிட்டார். மேலும் அவர் கூறியது:ஆண், பெண் என்பது இறைவனின் படைப்பாகும்.அதனை மாற்ற முடியாது.
ஓரினச்சேர்க்கை திருமணம் செய்பவர் இயற்கையான நிலையை சீர்குலைக்க முயலுகின்றனர்.கருக்கலைப்பு, கருணைக் கொலையைப் போலவே ஓரினச் சேர்க்கை திருமணமும் உலக அமைதிக்கு எதிரானது.இவ்வாறு போப் கூறினார். அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஆதரவான கொள்கை முடிவுகளை அரசுகள் எடுத்துவரும் வேளையில் போப்பின் இந்த விமர்சனம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் மற்றும் மேரிலாண்டில் அண்மையில் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவாக பெரும்பாலான மக்கள் வாக்களித்தனர்.இவ்விடங்களில் ஓரினச்சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment