சீனா ஊடாக பயணம் செய்யும் வெளிநாட்டினர், விசா இல்லாமல் பீஜிங் நகரில் 72 மணி நேரம் தங்கும் வகையில் புதிய திட்டத்தை சீனா அறிவித்துள்ளது. ஆனால், இந்த விசா தேவையற்ற திட்டத்தில் இந்தியர்கள் சேர்க்கப்படவில்லை.
இந்த திட்டம், பல நாடுகளில் தற்போது அமலில் உள்ள திட்டம்தான். TWOV (Transit Without Visa) என்று கூறப்படும் இந்தத் திட்டத்தில், அநேக நாடுகள், இந்தியா உட்பட, தமது விமான நிலையங்கள் ஊடாக 3-வது நாடு ஒன்றுக்கு செல்வதை அனுமதிக்கிறது. ஆனால், விமான நிலையத்திலேயே தங்கி, அடுத்த விமானத்தை பிடிக்க வேண்டும்.
சீனா தற்போது கொண்டுவந்துள்ள TWOV, தலைநகர் பீஜிங்கில் மட்டும் 72 மணி நேரம் தங்குவதற்கு அனுமதிக்கிறது. விசா இல்லாமல் பீஜிங்கை வெளிநாட்டினர் சுற்றிப் பார்க்கலாம். இந்த சிறப்பு அனுமதி 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. இதேபோல் பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை ஆகிய நாட்டினருக்கும் விசா இல்லாமல் தங்குவதற்கு அனுமதி இல்லை. இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் அண்டை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஐரோப்பிய, ஸ்கன்டிநேவிய நாட்டு பயணிகளுக்கு இந்த விசா சலுகை கொடுத்துள்ள சீனா, நார்வே நாட்டு பயணிகளுக்கும் இந்த சலுகையை கொடுக்கவில்லை. அமைதிக்காக பாடுபடும், நார்வேயை தள்ளி வைத்துள்ள காரணம் என்ன?
அரசியல்தான்!
2010-ம் ஆண்டில் நார்வேயின் நோபல் பரிசு கமிட்டி, சமாதானத்துக்கான நோபல் பரிசுக்காக Liu Xiaoboவை பரிந்துரை செய்தது. இவர், சீனாவில் இருந்து வெளியேறி, சீனாவின் மனித உரிமை மீறல்களுக்காக குரல் கொடுத்து போராடி வருபவர்
0 கருத்துரைகள்:
Post a Comment