Friday, December 14, 2012

எகிப்து:முர்சிக்கு எதிராக செயல்பட்டால் புரட்சி வெடிக்கும்-ஸலஃபிக்களின் தலைவர் எச்சரிக்கை


ஜனநாயக முறையில் தெரிவானவரே ஜனாதிபதி முர்ஸி: அவருக்கு எதிராக செயற்பட்டால் புரட்சி வெடிக்கும் – ஸலபி தலைவர் ஸயீத் அப்துல் அஸீம் .

தற்போதைய ஜனாதிபதி கலாநிதி முஹம்மத் முர்ஸி ஜனநாயக முறையில் தெரிவானவர். அவருக்கு எதிராக செயற்பட்டாலோ, வெளியேற்ற முற்பட்டாலோ இஸ்லாமிய புரட்சி வெடிக்கும் என எகிப்திய ஸலபிக்களின் முன்னணி தலைவர் ஸயீத் அப்துல் அஸீம் எச்சரிக்கை விடுத்தார். 

“மதச்சார்பற்றோர் ஜனாதிபதியை வெளியேற்ற
வோ அல்லது ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடவோ முயற்சித்தால் அதுவரை நாம் சும்மா இருக்கமாட்டோம். எண்ணிலடங்காத மக்களைக் கொண்டு ஒரு இஸ்லாமிய புரட்சிக்கான ஏற்பாட்டை செய்வோம்” என்று அலக்சான்ட்ரியா நகரில் நடந்த ஊடக மாநாட்டில் அப்துல் அஸீம் குறிப்பிட்டார்.

இதில் எதிர்த் தரப்பினர் வெளிநாட்டு நிதியில் அமெரிக்காவின் தாக்கத்துடன் இஸ்ரேலுக்கு ஏற்றவாறு எகிப்தின் தலைவிதியை மாற்ற முற்படுவதாகவும் முன்னணி ஸலபி தலைவர் குற்றம் சாட்டினார்.
அவர்கள் இஸ்லாத்திற்கு எதிரானவர்கள் என எதிர்த்தரப்பு தலைவர்கள் மீது அவர் குற்றம்சாட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza