புதுடெல்லி:பாபரி மஸ்ஜித் இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி உள்ளிட்ட சங்க்பரிவார தலைவர்கள் மீதான குற்றவியல் சதித்திட்ட வழக்கை ரத்துச் செய்த அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ மேல் முறையீடுச் செய்திருந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஆனால், சி.பி.ஐக்காக ஆஜராக வேண்டிய கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் எ.எஸ்.சந்தோக்கியா நீதிமன்றத்திற்கு வரவில்லை. சி.பி.ஐ வழக்கறிஞரான அரசு கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் ஆஜராக உச்சநீதிமன்றத்திற்கு வராததை நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து, சந்திரமெளலி, கே.ஆர்.பிரசாத் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.
அரசு கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் இவ்வழக்கை அலட்சியமாக கருதுகிறார் என்று நீதிபதிகள் விமர்சித்தனர். சி.பி.ஐயை இவ்வழக்கில் சேர்க்கத்தான் கடந்த முறை ஒத்திவைக்கப்பட்டது. வாதிட விருப்பமில்லாத காரணத்தால் தான் சி.பி.ஐயின் வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பதை இது காட்டுகிறது என்று கண்டித்த நீதிபதிகள் வழக்கை 2 மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இன்னொரு வழக்கில் வாதாடுவதால் கூடுதல் சோலிசிட்டர் ஜெனரல் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றூ சி.பி.ஐக்காக ஆஜரான ஜூனியர் வழக்கறிஞர் சமாளித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment