எஸ்.டி.பி,ஐ கட்சியின் தமிழக தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி வெளிட்டுள்ள அறிக்கை.
கர்நாடகா அரசு காவிரி கண்காணிப்பு ஆணையத்தின் உத்தரவுகளைகளையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் மதிக்காமல் செயல்பட்டு வருகிறது. தீர்ப்பாயத்தின் அனுமதியை மீறி தனது பயிரிடும் பரப்பை அதிகரித்து அதிக அளவில் காவிரி நீரை பயன்படுத்தி வருகிறது.
ஆனால் தமிழகத்திற்கு சிறிதளவு நீரை கூட திறந்து விட கர்நாடக அரசு மறுத்து வருகிறது. மேலும் பருவ மழையும் குறைந்துள்ளதால் தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 14 லட்சம் சம்பா பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. விரக்தி அடைந்துள்ள நிலையில் விவசாய குடும்பங்கள் தற்கொலை செய்துகொள்வதை இனியும் அனுமதிக்க முடியாது.எஸ்.டி.பி.ஐ கட்சி இதனை வன்மையாக கண்டிக்கிறது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசு மறுப்பது சட்ட விரோதம். ஜனநாயக அமைப்பை கேலிக் கூத்தாக்கும் செயல். இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசு மெளனமாய் இருப்பது தமிழகத்துக்கு செய்யும் துரோகம்.
எனவே காவிரி டெல்டா பகுதி விவசாய சங்கங்கள் நடத்தவிருக்கும் அறப்போராட்டத்திற்கும், நாளை(07.12.2012) நடத்த உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கும் எஸ்.டி.பி.ஐ கட்சி முழு ஆதரவை அளிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment