Wednesday, December 12, 2012

டெங்கு படுத்தும் பாடு: அதன் ஆபத்து என்ன? புதுவலசையில் நில வேம்பு கசாயம் வழங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடு!

டெங்கு பற்றி கேள்வி பட்டிருப்பீர்கள், ஆனால் அதன் ஆபத்து  என்ன என்பது தெரியுமா என்று தெரியவில்லை. டெங்கு வந்தால் அது முதலில் தாக்குவது என்பதைவிட, அழிப்பது நமது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை தான். இந்த வெள்ளை அணுக்கள் தான் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியம் என்பது உங்களுக்கு தெரியும். சாதாரணமாக ஒரு மனிதனுக்கு ஒரு லட்ச்சத்தி ஐம்பதாயிரத்திருக்கு மேல் வெள்ளை அணுக்கள் இருக்க வேண்டும். ஆனால் டெங்கு வெள்ளை அணுக்களை ஒன்று ஒன்றாக குறைபதில்லை. அழிப்பது பத்து ஆயிரம் தொடங்கி ஐம்பது ஆயிரத்திற்கும் மேல் ஒரு நாள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில்.

இது இருபது ஆயிரமாக இருக்குமானால் ரத்தம் உடலின் உள் பக்கமாக கசிய ஆரம்பிக்கும் விளைவு பல் இடையில், மூக்கில், யூரின், மலம் கழிக்கும் போது   ரத்த கசிவு  ஏற்படும். உடம்பில் அம்மை போன்று தோன்றும் இது நோயின் மோசமான சூழ்நிலை இந்த நேரத்தில் அதிகமாக வெள்ளை அணுக்கள் மட்டுமே ஏற்றபடுகின்றது.

ஒரு யூனிட் வெள்ளை அணுக்கள் ராமநாதபுரத்தில் 300௦ ருபாய் வரை கட்டணமாக வாங்கப்படுகிறது. அதுவும் மதுரையில் இருந்து தான் வரவேண்டும். ஆனால் மதுரையில் இந்த வசதி அதிகம் நாம் ரத்தம் கொடுத்தால் அதை எடுத்து கொண்டு நமக்கு வெள்ளை அணுக்கள் தருகின்றார்கள்.

ரத்தத்திற்காக அனைத்து இயகங்களையும் தொடர்பு கொள்ளுங்கள் நிச்சயம் உதவி கிடைக்கும். இயகங்கள் தரவில்லை என்றால், சரியான பதில் இல்லை என்றால் அவர்களை குறை கூறுவது அநாகரிகமான செயல்.

காரணம் உண்மையிலேயே அவர்களால் முடிய வில்லை தேவைபடுவோர் எண்ணிக்கை அதிகம். அதே சமயம் இந்த குரூப் ரத்தம் மட்டும் தான் வேண்டும் என்று கேட்பதால் அவர்கள் அதை கொடுக்க கூடியவர்களை கொண்டு வருவது மிக கஷ்ட்டமானது.

மதுரை மீனாச்சி மிசனில் சூழ்நிலைய சொன்ன போது அவர்கள் சொன்னது மிகவும் உபயோகமானது. எந்த குருப் ரத்தமனாலும் சரி ஆட்களை மட்டும் கொண்டு வாருங்கள் ரத்தம் நாங்கள் எடுத்து கொண்டு நோயாளிக்கு எது தேவையோ அதை நாங்கள் கொடுத்ததுக்கு கொள்வோம் என்று சொன்ன வார்த்தை, "ரத்தம் மிக விரைவாக கிடைக்க உதவியது."

சாதாரண காய்சல் என்றால் உங்களுக்கு அதிக பட்சம் இரண்டு ஆயிரம் சிலவு ஆகலாம்.

ஆனால், டெங்கு முதல் நிலை என்றால் ராமநாதபுரத்தில் நான்கு நாட்கள் இருந்தால் பண்ணிரெண்டு ஆயிரத்திற்கு மேல் ஆகும். நிலைமை மோசம் ஆனால் அது கூடி கொண்டே போகும் எனக்கு தெரிந்து ஒருவர் ஒரு லட்சம், எழுபது ஆயிரம், நாற்பது ஆயிரம் என்று செலவு செய்து உள்ளனர். இவ்வளவு தான் ஆகும் என்று சொல்ல முடியாத சூழ்நிலை. ஒரு டாக்டர் 85 ஆயிரம் தன்மகளுக்காக ஆனதாக சொன்ன செய்தி சமீபத்தில் படித்தேன் நீங்ககள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை.

"டெங்கு  கொசு   பகலில் மட்டுமே கடிக்கும்."

சித்தார் கோட்டையில் டெங்கு உள்ளது. பனைகுளத்திலும் உள்ளது என்று கேள்வி நம் ஊரில் இல்லை. இந்த பத்து நாட்களில் மூன்று முறை புகை மருந்து அடிக்கப்பட்டுள்ளது. கிணற்றுக்கு மருந்து ஊற்றப்பட்டுள்ளது. அப்படி ஊற்றாதவர்கள் கிணற்றில் 100ml தேங்காய் எண்ணெய் பத்து நாளைக்கு ஒரு முறை உற்றுங்கள் இது கொசு உண்டாவதை தடுக்கும்.

"இதில் கொடுமை என்னவென்றால் இப்போ டெங்கு மட்டும் வருவதில்லை கூடவே மலேரியாவும் சேர்ந்து வருவது."

நன்றி : சகோ. அன்வர் ராஜா (புதுவலசை)

குறிப்பு : டெங்குவிற்கான மருந்தாக இன்று தமிழகத்தில் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட்டு வருகின்றது. பனைக்குளம், அழகங்குளம், சித்தார்கோட்டை ஆகிய ஊர்களில் கொடுக்கப்பட்டுள்ளது. பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக வருகிற 13 அல்லது 14 தேதிகளில் நிலவேம்பு கஷாயம் கொடுக்கப்பட உள்ளதாக புதுவலசை பாப்புலர் ப்ரண்ட் பொறுப்பாளர் நம்மிடம் தெரிவித்தார்.

நில வேம்பு, வெட்டி வேர், விளாமிச்சை வேர், பேய்ப்புடல், பற்பாடகம், கோணக்கிழங்கு, சந்தனத் தூள், சுக்கு, மிளகு உள்பட 9 வகை மூலிகைகளால் தயார் செய்யப்பட்டது ஆகும் எனத் தெரிவித்தனர். இவை அனைத்தையும் சேர்த்து 4-5 மணி நேரம் நன்றாக காய்ச்சி இந்த கஷாயம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதனை அருந்துவதால் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காய்ச்சல் மட்டுமின்றி இருமல், சளி, ரத்த அழுத்தம் உள்பட பல்வேறு நோயினால் அவதிப்படுவோர் இதனைச் சாப்பிட்டால் நோயை விரைவில் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza