லக்னோ : 2014 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் வெற்றி பெறும் பொருட்டு அனைத்து கட்சிகளும் மும்முரமாய் உள்ளது. இச்சூழலில் முஸ்லீம் பெண்களின் திருமணத்திற்காக 30,000 ரூபாய் உத்தர பிரதேச அரசு வழங்கியுள்ளது.
உத்தரபிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் முஸ்லீம் கேபினெட் அமைச்சர் ஆஸம் கானின் மவுலானா ஜவஹர் பல்கலைகழகத்தில் நடந்த முஸ்லீம் பெண்களுக்கான திருமண உதவி திட்ட தொடக்க விழாவில் உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் முதல் கட்டமாக 10வது தேர்வான 10,000 பெண்களுக்கு திருமணம் அல்லது மேற் படிப்புக்காக 30,000 வழங்கினார்.
இன்று முதல்வர் கையால் உதவி தொகை வாங்கிய பெண்கள் ஐந்து மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதும் அந்த ஐந்து மாவட்டங்களிலும் முஸ்லீம்களின் எண்ணிக்கை 30 முதல் 50 சதவிகிதம் வரை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்போதும் முஸ்லீம்கள் பெருவாரியாக சமாஜ்வாதிக்கு ஓட்டளித்தாலும் 2009 தேர்தலில் கல்யாண் சிங்குடன் கூட்டணி சேர்ந்ததற்காக முஸ்லீம்கள் சமாஜ்வாதி கட்சிக்கு ஒட்டளிக்கவில்லை. அதன் பிறகு கல்யாண்சிங்குடான உறவை முலாயம் சிங் முறித்து கொண்டதால் முஸ்லீம்களின் பெரும்பான்மை ஆதரவுடன் சமாஜ்வாதி கட்சி கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment