11.12.2012 காலை 6 மணியளவில் பாரதி நகர் என்ற பகுதியில் உள்ள ஓம் க்தி நகர் பள்ளிவாசலில் உள்ள ஜன்னல்களில் உள்ள கண்ணாடிகளை இந்து துவா சிந்தனயுள்ள பாசிஸ்டுகள் கற்களை கொண்டு வீசி உடைத்துள்ளனர். தொடந்து ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல்கள் (பாரதிநகர் மார்கஸ், குமாரயா கோவில் புகாரிய பள்ளி, செய்யது அம்மாள் பள்ளிவாசல்) மீது பாசிஸ்டுகள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் காவல்துறையோ சமூக நல்லிணக்கத்தில் பாராமுகமாய் செயல்பட்டு வருகிறது.
இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் முஸ்லிம் நல அறக்கட்டளை நிர்வாகி காதர்மைதீன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில், பள்ளிவாசல் ஜன்னல் கண்ணாடிகளை சேதப்படுத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி மாவட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தலைவர் ஹபீப் நவாஸ்கான், எஸ்.டி.பி.ஐ. அமைப்பின் மாவட்டத் தலைவர் நூர்ஜியாவுதீன், மாவட்ட தமுமுக செயலர் அன்வர்அலி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நகர் பொறுப்பாளர் முஸம்மில், அனைத்து இஸ்ஸôமியக் கூட்டமைப்பின் தலைவர் முத்தலீபு உள்ளிட்ட முஸ்லிம்கள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் க.நந்தகுமார், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன், டி.எஸ்.பி.முரளீதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உறுதியைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசலின் மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனை அறிந்து ஒன்று திரண்ட இஸ்லாமிய இளைஞர்கள் அவர்களை பிடிக்க முயற்சி செய்யும் போது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment