Saturday, December 15, 2012

அப்சல் குருவை தூக்கிலிடக் கூடாது! – மத்திய அமைச்சர்


images நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் கைது செய்து பெரும்பான்மை மனசாட்சிபடி தூக்குத்தண்டனை வழங்கப்பட்ட அப்சல் குருவை தூக்கில் போடக்கூடாது என்று மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா கூறியுள்ளார். இதற்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி அன்று நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அப்சல் குருவுக்கு எதிராக எவ்வித ஆதாரம் இல்லாதபோதும் பெரும்பான்மை மனசாட்சிபடி தூக்கு தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது.இந்நிலையில் நாடாளுமன்ற தாக்குதலின் 11 வது நினைவு நாளில் கொல்லப்பட்ட 9 பாதுகாப்பு வீரர்களின் புகைப்படங்களுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய அமைச்சர் பெனி பிரசாத் வர்மா, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், அப்சல் குருவிற்கு தூக்கு தண்டனை அளிக்கக் கூடாது என்றும், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பா.ஜனதா, மக்களவையில் இது குறித்து கேள்வி எழுப்பியது. இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உறுப்பினர்களின் அமளியால் அடுத்தடுத்து அவை ஒத்திவைக்கப்பட்டது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza