பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுதுறையின் சார்பில் புதுவலசையில் கடந்த 14/12/12 அன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் டெங்கு நோய் தடுப்பு நிலவேம்புகசாயம் புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் வைத்து இலவசமாக வழங்கப்பட்டது. இதில் புதுவலசை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார பொதுமக்கள் எராளமான பொதுமக்கள் கலந்துகொண்டதுடன் வீடுகளுக்கும் வாங்கி சென்றனர்.
இதில் மொத்தமாக சுமார் 900 பொதுமக்களுக்கு மேல் பயன்பெற்றனர். இதற்கான எற்பாடுகளை புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தனர். முன்னதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக நிலவேம்பு கசாயம் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று மேற்குறிப்பிட்ட அதே நாளில் புதுவலசை ஊராட்சிமன்றத்தின் சார்பிலும் நிலவேம்புகசாயம் மக்களுக்கு வழங்கப்பட்டது.
0 கருத்துரைகள்:
Post a Comment