Saturday, December 15, 2012

அக்கோட்டில் நடந்த வன்முறை நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதம் 23ம் தேதி அன்று மஹாராஷ்டிரா மாநிலம் அக்கோட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் 4 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் உட்பட பலரும் படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவத்தை விசாரிப்பதற்காக கல்லூரி பேராசிரியரின் தலைமையில் மஹாத்மா காந்தி அந்தராஷ்டிரிய விஷ்வவித்யாலயாவின் மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உண்மையை கண்டறியும் பொருட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று தங்களது அறிக்கையை சமர்பித்துள்ளனர்.
இச்சம்பவம் முழுக்க முழுக்க நன்கு திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளது என்றும் இதில் 22ற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகள் தீக்கறையாக்கப்பட்டுள்ளது. 25ற்கும் மேற்பட்ட இந்து முஸ்லிம்களின் கடைகளும் தீ வைத்து கொழுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் கொல்லப்பட்ட அனைவரும் மிகவும் ஏழை குடும்பத்தைச்சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


கடந்த நவம்பர் 2, 3 மற்றும் 22,23 ஆகிய தேதிகளில் உண்மை கண்டறியும் குழு அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தது.  உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்றிருந்த ஷராத் ஜெய்ஸ்வால் பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, "பதற்ற சூழ்நிலை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் இந்து முஸ்லிம் சமூகத்தினரிடையே குரோதம் அதிகரித்துள்ளது. வகுப்பு வாத சக்திகள் இரு சமூகத்தினரிடையே பிளவை உருவாக்கி அச்சத்தை ஏற்படுத்தும் விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளனர்" என தெரிவித்தார். 

நவ நிர்மதி அமைப்பின் உறுப்பினர் அமீர் அலி அஜானி கூறும்போது "வகுப்புவாத சக்திகள் விதர்பா பகுதிகளில் தங்களது ஆதிக்கத்தை நிலை நாட்ட பல்வேறு விதமான சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவத்தை பார்க்கும் போது அவர்கள் தங்களது காரியங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்பதனையே காட்டுகிறது. இச்சம்பவத்தை பத்திரிகைகளும் முழுமையாக மறைத்து வருகிறது." என அவர் குற்றஞ்சாட்டினார்.
இச்சம்பவத்தின் பின்னனி:
கடந்த அக்டோபர் 19ம் தேதி அன்று 7வயது மதிக்கத்தக்க முஸ்லிம் சிறுவன் எதேர்ச்சையாக துப்பியுள்ளான். இது அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த துர்கா பூஜாவின் பந்தலில் பட்டுவிட அப்பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த தோபி மற்றும் போய் இனத்தைச்சேர்ந்தவர்கள் அச்சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளனர். இவர்களுக்கும் பஜ்ரங்தள் மற்றும் விசுவ ஹிந்து பரிஷத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிலர் இதில் தலையிட்டு சமாதானம் செய்ய முயன்றனர். அவ்வாறு சமாதான முயற்ச்சியில் ஏஜாஸ் என்பவரும் ஈடுபட்டார். இது நடைபெற மணி நேரத்தில் ஏஜாஸின் கடைக்கு வந்த காவல்துறை அதிகாரிகள் அச்சிறுவனின் பெயர் முகவரியை அவரிடம் கேட்டிருக்கின்றனர். அவர் தனக்கு அச்சிறுவனைப்பற்றி தெரியாது என்றும் அவனை மன்னித்து விடுமாறு கூறிய பின்பும் வழுக்கட்டாயமாக ஏஜாஸை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
அக்கோட் பகுதியில் எம்.எல்.ஏவாக இருக்கின்ற சிவசேனாவின் சஞ்சேய் காவன்டே தன்னுடைய ஆதரவாளர்கள் 200 பேர் மற்றும் பஜ்ரங்தள், வி.ஹெச்.பி அமைப்பினர் காவல்நிலையம் வந்து கோஷங்களை எழுப்பினர். இவர்கள் கொடுத்த நெருக்கடியின் பேரில் காவல்துறை அதிகாரிகள் ஏஜாஸையும் அடித்து துன்புறுத்தியுள்ளனர். 

ஷொஹைப் என்பவரையும் காவல்துறை அதிகாரிகள் அழைத்து விசாரித்துள்ளனர். அச்சிறுவனின் பெயர் மற்றும் முகவரியை காவல்துறையினரிடம் அவர் தெரிவித்துள்ளார். அச்சிறுவனின் வயதை வைத்து இது வேண்டுமென்றே நடந்திருக்காது என காவல்துறையினர் கூறிவிட்டனர். 

இவ்வாறு இருந்த போதிலும் சிவசேனாவின் எம்.எல்.ஏ இது திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்றும் இதற்கு பின்னால் சிலர் இருந்து செயல்பட்டுள்ளார்கள் என்று ஆதாரமற்ற கருத்துக்களை பரப்பியுள்ளார். இவர்கள் கொடுத்த நெருக்கடியில் ஏஜாஸ் மற்றும் ஷொஹைப் ஆகிய இருவரையும் 107 பிரிவின் படி கைது செய்து அன்றிரவு முழுவதும் காவல் நிலையத்திலேயே வைத்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற போது அதில் தலையிட்டு சமாதானம் செய்த ஒரே காரணத்திற்காகவே அவ்விருவரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 
இச்சம்பவம் நடைபெற்று முடிந்த பிறகு சிலைகளை கரைக்க வரும் போது அவர்கள் மீது கல்லெறிந்து தாக்க முஸ்லிம்கள் திட்டமிட்டுள்ளார்கள் என்ற வதந்தி பரவியுள்ளது. 


அக்டோபர் 23ம் தேதி அன்று சம்பவம் நடைபெற்ற அதே இடத்தில் சிலைகளுடன் ஆயிரக்கணக்கானவர்கள்ச கூடினார்கள். கூட்டத்தில் இருந்த ஒருவன் தன் மீது கல்லெறியப்பட்டதாக கூறியுள்ளான். 

உண்மை கண்டறியும் குழுவினர் மூத்த காவல்துறை அதிகாரிகளிடம் உண்மையில் அது போன்ற கல்லெறிந்த சம்பவம் நடைபெற்றதா? என விசாரித்தனர். ஆனால் அது வெறும் வதந்தி தான் என்பதை காவல்துறையினர் பதில் கூறியுள்ளனர். 


அன்றைய தினம் வகுப்புவாதிகள் இரவு 8 மணியளவில் பரதே பிளாட் அருகே 22ற்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் வீடுகளுக்கு தீ வைத்து இரு அப்பாவிகளை கொலை செய்தனர். 

சரியாக நடக்கக்கூட முடியாத 80 வயது மதிக்கத்தக்க முதியவரான ஹாஜி முஹம்மது யாசின் என்பவரை கொலை செய்தததோடு அவரது மனைவி ஜுலைஹா பீவியையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். தற்போது சுய நினைவின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தன்னுடைய வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பிய 16 வயது ஜஃபரூதீன் என்ற சிறுவனையும் கொலை செய்துள்ளார்கள். 


வன்முறையாளர்கள் தீப்பந்தம், இரும்பு கம்பி, வாள் மற்றும் மண்ணெண்ணையுடன் திருந்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது. வன்முறைய தடுக்க நினைத்த சில காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளார்கள்.



இச்சம்பவத்திற்கு பழி தீர்க்கும் விதத்தில் நடைபெற்ற மறு தாக்குதலில் அக்டோபர் 24ம் தேதி அன்று 82 வயது மதிக்கத்தக்க மனோகர் ராவ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உண்மை கண்டறியும் குழு கூறும்போது இப்பகுதியில் வகுப்புவாத அமைப்புகள் நன்கு ஊடுறுவியுள்ளதாகவும், முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் மத மோதல்களை உருவாக்கும் விதத்தில் செயல்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. இந்துக்கள் அனைவரும் ஒன்றினையாவிட்டால் முஸ்லிம்களின் கைகள் தான் ஓங்கி இருக்கும் என விஷமத்தனமான பிரச்சாரங்களையும் அவ்வகுப்புவாதிகள் மேற்கொண்டிருக்கின்றனர். 

இருதரப்பிலும் 50 நபர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza