Monday, December 17, 2012

சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் குண்டுவெடிப்பு இந்துத்துவ தீவிரவாதி கைது!


சம்ஜோதா எக்ஸ்ப்ரஸ் ரயில் குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான தீவிரவாதி ராஜேஷைத் தேசிய குற்றப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.டெல்லி மற்றும் பாகிஸ்தானிலுள்ள லாகூர் இடையே இயக்கப்பட்ட சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. அரியானா மாநிலம் பானிப்பட் அருகே பாகிஸ்தான் நோக்கி ரயில் சென்று கொண்டிருந்த வேளையில் இந்த அசம்பாவிதம் நடந்தது.குண்டுவெடிப்பைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளில் ஏற்பட்ட பயங்கர தீயில் கருகி ரயில் பயணிகள் 68 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் பலத்தக் காயமுற்றனர். இதில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம்.

இந்த குண்டுவெடிப்புக்கு முதலில் லஸ்கர் இ தொய்பா,ஜெய்ஷ் இ முஹம்மத் என  புருடா விட்டு அப்பாவி முஸ்லிம்கள் பலரை கைது செய்தனர் இவர்கள் இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றனர் என  பொய் குற்றம் சாட்டினர்  இந்திய உளவு துறை.பத்திரிக்கைகளும் முதல் பக்கத்தில் வெளியிட்டு முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்தனர்.பின்னர் தெரியவந்தது செய்தது ஆர்.எஸ்.எஸ் பின்னர் பத்திரிக்கைகளும் இந்த செய்தியை ஒரு பெட்டி செய்தியாக மாற்றியது.பொது மக்களும் முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரிக்க ஆரம்பம் செய்து விட்டனர்.

இந்தக் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கியக் குற்றவாளியான ராஜேஷ் சவுதாரி என்ற தீவிரவாதியை மத்திய பிரதேசத்திலுள்ள உஜ்ஜயினில் தேசியப் புலனாய்வு அமைப்பினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த ராஜேஷ் சவுதாரி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய்ச் சன்மானம் வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 

சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு நடந்த காலத்தில், இந்த நாசகார வேலையில் பாகிஸ்தான் ஈடுபட்டதாக காவல்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாலேகான் குண்டுவெடிப்பு விசாரணையில், ஹிந்துத்துவ இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்ட தகவல்கள் வெளியானதன் பின்னர் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு விசாரணையும் திசைமாறி, அதில் ஈடுபட்டவர்களாக சுவாமி அசிமானந்தாவையும் மேலும் நான்கு ஹிந்துத்துவ தீவிரவாதிகளையும் அடையாளம் காட்டியது தேசிய புலனாய்வு அமைப்பு! 

இதனைத் தொடர்ந்து சுவாமி அசிமானந்தா வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகே, இந்தக் குண்டுவெடிப்புகளில் ஈடுபட்ட உண்மயான தீவிரவாதிகள் யாரென்பது வெளியாக ஆரம்பித்தது.

source: http://www.popularfrontnellai.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza