அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 27 என்று மற்றொரு செய்தி கூறுகிறது. துப்பாக்கிதாரி கொல்லப்பட்டு விட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள். பள்ளிக்கூட அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது. நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் பராக் ஒபாமா தனது வருத்தங்களையும், அனுதாபங்களையும் வெளியிட்டார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," எமது இதயங்கள் நொறுங்கிவிட்டன " எனக் கூறியுள்ளார்.ஆடம் லான்சா என்ற 20 வயது இளைஞன் செய்த கொடூர சம்பவமே இது. இந்த துப்பாக்கி சூட்டில் அந்த பள்ளியின் ஆசிரியராக பணி புரிந்த லான்சாவின் தாயும் இறந்துள்ளது அடுத்த கொடுமை. அமெரிக்க முழுக்க இது போன்ற கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது அந்நாட்டு ஆள்வோரை கதி கலங்க வைத்துள்ளது.
குறிப்பு :தற்பொழுது பாலஸ்தீனம் முன்பு ஆப்கான்,ஈராக் போன்ற நாடுகளில் ஆயிரகணக்கான குழந்தைகள் கொல்லப்பட்ட பொழுது ஒன்றுமே கண்ணது கொள்ளாத அமெரிக்கா இப்பொழுது மட்டும் அழுது நடிப்பது ஏன்?மற்ற முஸ்லிம் நாடுகளில் உள்ள தாய்மார்களுக்கு வலிக்காத குழந்தைகளை இழந்த வேதனை
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் தீவிரவாதத்தை ஒழிக்கிறேன் என்று மல்லு கட்டும் அமெரிக்கா தனது நாட்டை ஏனோ கவனிப்பதில்லை. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். இந்த எண்ணிக்கை தினமும் பெருகி வருகிறது.
ஒரு வருடத்தில் துப்பாக்கி சூட்டால் இறந்தவர்களின் எண்ணிக்கை:
பினலாந்து - 17
ஆஸ்திலேலியா - 35
இங்கிலாந்து - 39
ஸ்பெயின் - 60
ஜெர்மனி - 194
கனடா - 200
அமெரிக்கா – 9484
http://www.bradycampaign.org/xshare/Facts/2010-09_GBA_Overview_FINAL.pdf
(துப்பாக்கி சூடு நடத்திய ஆடம் லான்சாவின் இளமைக் கால புகைப்படம். கள்ளம் கபடமற்ற இந்த பாலகனை கொலைகாரனாக மாற்றியது அமெரிக்க வாழ்வு முறையே!)
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக்கில் வாழும் அமெரிக்க படையினர் தினமும் ஒரு வித அச்சத்திலேயே வாழ்கின்றனர். எந்த நேரத்தில் நமது உயிர் பிரியுமோ என்ற பயத்தில் வாழ்வதால் மன சிதைவுக்கு ஆளாகின்றனர். இங்கிருந்து மனநலம் பாதிக்கப்பட்டு அமெரிக்கா சென்றவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தொட்டுள்ளது. இந்த மனச்சிதைவு முற்றி முடிவில் சமூகத்தின் மேல் வெறுப்புற்று கண்ணில் கண்டவர்களை எல்லாம் சுட ஆரம்பித்து விடுகின்றனர். நாத்திகத்தின் தாக்கமும் இந்த மக்களை அதிகம் மன நோயாளிகளாக ஆக்குகிறது. உண்மையான இறை பக்தியில் மனம் அமைதி அடைவதை பலர் உணர்வதில்லை.
துப்பாக்கியின் உரிமத்தை ஒழித்தால் குற்றம் குறையும் என்பவர்கள் அவன் வேறு வழியை நாடினால் என்ன செய்வார்கள். அவனுக்கு தேவை மன அமைதி. அதைக் கொடுத்தாலே பல பிரச்னைகள் முடிவுக்கு வரும்.
ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, பாலஸ்தீன், மற்றும் ஆப்ரிக்க நாடுகள் என்று பல நாட்டு மக்களின் வயிற்றெரிச்சலை நிறைய சம்பாதித்துள்ளது அமெரிக்கா. அதன் பலனாக தனது நாட்டு அப்பாவி மக்களை தினமும் பலி கொடுத்து வருகிறது. ஆயுத விற்பனைக்காக மற்ற நாட்டில் மூக்கை நுழைப்பதை குறைத்துக் கொண்டு நாட்டு மக்களின் மன அமைதிக்கு என்ன வழி என்பதை அதிபர் ஒபாமா யோசித்தால் அதுவே நிரந்தர தீர்வாகும்.
துப்பாக்கி சூட்டில் இறந்த அனைத்து அப்பாவி உயிரிகளுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
துப்பாக்கிச் சூட்டில் இறந்த இளம் பிஞ்சுகளும் ஆசிரியர்களும் பெயர், வயது வாரியாக...
Charlotte Bacon, 6
Daniel Barden, 7
Olivia Engel, 6
Josephine Gay, 7
Ana Marquez-Greene, 6
Dylan Hockley, 6
Madeleine Hsu, 6
Catherine Hubbard, 6
Chase Kowalski, 7
Jesse Lewis, 6
James Mattioli, 6
Grace McDonnell, 7
Emilie Parker, 6
Jack Pinto, 6
Noah Pozner, 6
Caroline Previdi, 6
Jessica Rekos, 6
Avielle Richman, 6
Benjamin Wheeler, 6
Allison Wyatt, 6
Rachel Davino, 29
Teacher
Dawn Hochsprung, 47
School principal
Nancy Lanza, 52
Mother of gunman
Anne Marie Murphy, 52
Teacher
Lauren Rousseau, 30
Teacher
Mary Sherlach, 56
School psychologist
Victoria Soto, 27
Teache
source: http://www.popularfrontnellai.com
0 கருத்துரைகள்:
Post a Comment