Thursday, December 13, 2012

உண்மையில் அஸ்ஸாமில் பிழைக்க வந்த வந்தேறிகள் யார்?அஸ்ஸாம் முஸ்லிம்களின் உண்மை வரலாறு...



 
 தேசப்பிரிவினைக்குப் பிறகு பிரிக்கப்பட்ட பாகிஸ்தானில் இருந்து   அத்வானி  உள்பட பெருபான்மையான இந்துக்கள் வெளியேறி இந்தியாவிற்கு வந்தார்கள் என்று கூறினால் அவர்கள் இந்தியயர்கள்  அது நம்பக்கூடியதாக உள்ளது. ஆனால் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் (கிழக்கு) பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் 
வந்தார்கள் என்றால் அவர்கள் வந்தேறிகள் !!!என்ன கொடுமை சுதந்திரதிற்கு உழைத்த முஸ்லிம்களை சுதந்திரம் கிடைத்த பிறகு அடித்து விரட்டியது யார்?மேலும் இன்று அசாமில் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தியான உள்ள முஸ்லிம்களை அடித்து விரட்டுவது ஏன் ? உண்மையில் மங்கோலியாவில் இருந்து வந்து அஸ்ஸாமில் குடியேறிய போடோ தீவிரவாதிகள் வந்தேறிகள் கிடையாதா?யார் இந்த அஸ்ஸாம் வாழ் முஸ்லிம்கள் உண்மையில் இவர்கள் வந்தேறிகளா ?ஒரு உண்மை வரலாறு பார்ப்போம்...


ஸ்ஸாமில் அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்களின் அவல நிலையை ஆய்வு செய்யவும், அவர்களின் மீள் குடியேற்றத்திற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த அரசை வலியுறுத்தும் விதமாகவும், டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கம் NCHROவின் (மனித உரிமை இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு) சார்பாக ஒரு மனித உரிமைக்குழு கடந்த பிப்ரவரி மாதம் அஸ்ஸாமிற்குச் சென்றது.

இரண்டு நாட்கள் அங்கு முகாமிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்காக களப்பணியாற்றிக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்கள், மனித உரிமைப் போராளிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது இக்குழு. மேலும், இக்குழு ‘ஸ்டெம்’ (STEM -  Society for Total Empowerment of minorities, Assam) என்ற உள்ளுர் அமைப்புடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. சுமார் 50 பேர் கலந்து கொண்ட இந்த உரையாடலில் ஆக்கப்பூர்வமான பல கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. அஸ்ஸாம் யுனைடெட் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் கட்சியின் எம்.எல்.ஏ. முனவர் உசேன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அஸ்ஸாம் சென்ற இந்த மனித உரிமைக்குழுவில் தமிழகத்திலிருந்து பங்குபெற்ற NCHROவின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ. முஹம்மது யூசுப் அவர்கள் தங்கள் ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தக் கட்டுரையை எழுதியுள்ளார்.

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் மீது “போடோ” தீவிரவாதிகள் சமீபத்தில் நடத்தி வரும் கலவரம், அதில் கொல்லப்பட்ட பல முஸ்லிம்கள், எரிக்கப்பட்ட முஸ்லிம் கிராமங்கள், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்ட பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் என அங்கு முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான சோகங்கள் அணுதினமும் செய்தித்தாள்களையும், தொலைக்காட்சி சேனல்களையும் நிறைத்துக் கொண்டிருப்பதை நாம் காணமுடிகின்றது.

 இதனை கலவரம் என்பதை விட ‘இனச்சுத்திகரிப்பு’ (Ethnic Cleansing') என்று கூறுவது  பொருத்தமாக இருக்கும்.

ஏனென்றால் கடந்த 65 வருடங்களில் பல இலட்சம் அஸ்ஸாம் முஸ்லிம்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போதும்  அங்கு பாதிப்பிற்குள்ளான முஸ்லிம்களின் எண்ணிக்கை சில இலட்சங்களைத் தாண்டுகின்றது.

 இவர்கள் மீது சுமத்தப்படும் ஒரே குற்றச்சாட்டு, இவர்கள் வங்கதேசத்தவர்கள், அந்நியர்கள் என்பது தான். எந்தவித ஆதாரமும் இன்றி பத்திரிகைகளும் அப்படித்தான் எழுதுகின்றன. இந்தக் குற்றச்சாட்டில் ஏதாவது உண்மை இருக்கின்றதா? என்பதை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

தொடரும் தேசப்பிரிவினையின் பாதிப்பு

1947ம் ஆண்டு பிரிட்டீஷ் அடிமைத்தளையிலிருந்து சுதந்திரம் அடைந்தது இந்தியா. அதன் ஒரு பகுதியாக இந்தியாபாகிஸ்தான் பிரிவினையும் நடைபெற்றது.

அப்போது இந்தியாவில் இருந்த முஸ்லிம்களில் மிகக்குறைவான அளவினர் பாகிஸ்தான் என வரையறுக்கப்பட்ட எல்லைப் பிரதேசத்திற்குள் சென்று, அங்கு குடியேறி  பாகிஸ்தான் பிரஜையாகி விட்டனர். எஞ்சியிருந்த கோடிக்கணக்கான முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல விருப்பமின்றி, இந்தியாவிலேயே தங்கி, இந்தியப் பிரஜைகளாக தங்களை உறுதி செய்து கொண்டனர்.

பாகிஸ்தானில் இருந்த அத்வானி உள்ளிட்ட இந்துக்களில் சொற்பமான அளவினர் இந்தியாவிற்கு வந்து குடியேறினர். இந்த நிகழ்விற்குப் பிறகு, தேசப்பிரிவினைக்குக் காரணம் முஸ்லிம்கள் தான் என்ற தவறான நச்சுக் கருத்து இந்துத்துவ ஃபாசிஸ்டுகளால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு, அதன் விளைவாக  முஸ்லிம்களுக்கு எதிராக நாடெங்கிலும் நடத்தப்பட்ட கலவரங்கள் ஏராளம்! ஏராளம்! அதில் பலியான முஸ்லிம்களின் எண்ணிக்கையோ சொல்லி மாளாது. (ஆனால் தேசப்பிரிவினைக்கு காரணம் முஸ்லிம்கள் அல்ல என்ற உண்மை பின்னாட்களில் வெளிவந்தது. பார்க்க: விடியல் வெள்ளி, ஆகஸ்ட் 1999)

இதற்குக் காரணம், இந்தியாவை ஹிந்துராஷ்டிராவாக (இந்து நாடாக) மாற்ற வேண்டும். அதற்கு, இங்குள்ள முஸ்லிம்கள் முற்றாகத் துடைக்கப்படவேண்டும் அல்லது அவர்கள் ஒட்டுமொத்தமாக பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டும் என்று பின்னப்பட்ட சதிவலையின் ஒரு பகுதிதான் அஸ்ஸாம் முஸ்லிம்களின் ‘இனச் சுத்திகரிப்பு’ மற்றும் அவர்கள் மீது சுமத்தப்படும் ‘வெளிநாட்டவர்’ என்ற குற்றச்சாட்டு.

இப்படிப்பட்ட இவர்களுடைய நச்சு சிந்தனையின் ‘மூலம்’ குறித்து வரலாற்று ஆசிரியர் ஆர்.என். அகர்வால் அவர்கள் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

“1917 முதலே (இந்து மகா சபை தலைவர்களில் ஒருவரான) வி.டி. சாவர்க்கர் ராஷ்டிரா (என்ற ஹிந்து ராஷ்டிரா) கொள்கையை தெளிவாகப் பேசி வந்தார். அவர் இந்துக்களிடம், நீங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்யத்திற்கான அடிப்படைகளை அமையுங்கள் என்று கூறினார்.”

இதே கருத்தைத் தான் ‘மொய்ரே விச்சார்’ என்ற இந்துத்துவ தலைவரும் பின்வருமாறு கூறினார்:

“ஹிந்துஸ்தான் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றில் உள்ள இந்து இனத்தின் எதிர்காலம் 4 தூண்களின் மேல் நிற்கின்றது என நான் பிரகடனப் படுத்துகின்றேன். 1. இந்து சங்காதனம் 2. இந்து ராஜ்யம் 3. முஸ்லிம்களை சுத்திகரிப்பு செய்வது 4. ஆப்கானிஸ்தானை கைப்பற்றி சுத்திகரிப்பது”.

இப்படி இந்துத்துவ தலைவர்கள், இந்திய இறையாண்மைக்கு எதிராக ஹிந்து ராஷ்டிராவை நிர்மாணிக்கும் நச்சுக் கருத்துக்களுக்கு நாடெங்கிலும் செயல்வடிவம் கொடுப்பதன் ஒரு பகுதிதான் அஸ்ஸõம் மக்கள் மீது இன்றுவரை இழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அநீதிகள்.

கிழக்கு பாகிஸ்தான்

அஸ்ஸாம் முஸ்லிம்கள் மீது ‘வங்க தேசத்தவர்’ என குற்றச்சாட்டை சுமத்தும் சதிகாரர்களும், மீடியாக்களும் இன்றைய வங்கதேசம் (பங்களாதேஷ்) என்பது 40 வருடங்களுக்கு முன்பு வரை பாகிஸ்தானாக இருந்தது என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர்.

இதனை நினைவில் வைக்கும் போது மட்டுமே, தான் இந்திய முஸ்லிம்களுக்கெதிரான இந்துத்துவ ஃபாசிஸ்டுகளுடைய சதித்திட்டத்தின் நீட்சி தான் அஸ்ஸாம் முஸ்லிம்களின் மீதான அந்நியர் என்ற குற்றச்சாட்டு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

1947 ஆகஸ்ட் 14 முதல் 1971 மார்ச் 25 வரை இன்றைய பங்களாதேஷ் கிழக்கு பாகிஸ்தானாக இருந்தது. அஸ்ஸõமில் முஸ்லிம்கள் 1971 வரை பாகிஸ்தான் பிரஜைகள் அல்லது பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவியர்கள் என்ற குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்பட்டார்கள்; விரட்டியடிக்கப்பட்டார்கள். இன்று ‘வங்கதேசத்தவர்’ என்று குற்றம் சுமத்தப்பட்டு கொல்லப்படுகின்றார்கள்; விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.

இந்துத்துவ சதியின் ஆழம் பற்றி சட்டமேதை கே.எல். கவ்பா அவர்கள் 1973ம் ஆண்டு தான் எழுதிய “பாசிவ் வாய்ஸ்” என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:

“(இந்தியா சுதந்திரமடைந்ததற்கு முன்பு) இந்து மகா சபையின் தலைவர்களில் ஒருவரான சங்கராச்சார் குர்ட்டோகி இப்படிப் பிரகடனப்படுத்தினார்: இந்தியா இந்துக்களுக்கே சொந்தம்;முஸ்லிம்கள் இங்கே விருந்தாளிகள் தான்;அவர்கள் விருந்தாளிகள் போல் நடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.”

இந்தியாவில் அதிகமான முஸ்லிம் ஜனத்தொகை  கொண்ட மாநிலமான அஸ்ஸாமில் உள்ள முஸ்லிம்களின் ஓட்டுரிமை தான் இந்த சதிகாரர்களுக்கு பெரும் பிரச்சனை. குடிமக்களின் ஓட்டுரிமை தான் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்.

பங்களாதேஷின் எல்லையோர மாநிலங்களில் ஒன்றான அஸ்ஸாமில், இந்தியப் பிரஜைகளாகிய முஸ்லிம்கள் சங்கராச்சார் குர்ட்டோகி கூறியதைப் போல் விருந்தாளிகளாக அல்லாமல் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் சக்தியான ஒட்டுரிமையுடன் வாழ்வதில் இந்துத்துவ ஃபாசிஸ்டுகளுக்கு உடன்பாடில்லை. ஆகவே தான் அங்குள்ள முஸ்லிம்களுக்கு இத்துணை அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

வெளியேற்றப்பட்டு  அகதிகளாக்கப்பட்ட முஸ்லிம்கள்

இந்திய சுதந்திரத்திற்குப் பின் (தேசப் பிரிவினைக்குப்பிறகு) 1950 களில் அஸ்ஸாமில் தொடர்ந்து நடந்த வகுப்புக்கலவரங்கள், கூட்டுப் படுகொலை, அவமானப்படுத்தப்படுதல், அச்சுறுத்தல்கள் ஆகியவற்றின் காரணமாக பாதுகாப்பற்ற சூழ்நிலையிலேயே, அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர் அங்குள்ள முஸ்லிம்கள். இவ்வாறு சமூகத்தில் மதிக்கப்படாத அற்ப புழுக்களாக (Undeserved Elements) நடத்தப்பட்டனர்.

கிழக்கு பாகிஸ்தானிலிருந்து (பங்களாதேஷிலிருந்து) ஊடுறுருவிய ஊடுறுவல்காரர்கள் (Pak- infilstrator) என அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டும் இவர்கள் மீது சுமத்தப்பட்டது. தேசப்பிரிவினைக்குப் பிறகு ‘முஸ்லிம்களுக்கான நாடு’ என அறிவிக்கப்பட்ட (கிழக்கு) பாகிஸ்தானிலிருந்து இந்துக்கள் வெளியேறி இந்தியாவிற்கு வந்தார்கள் என்று கூறினால் அது நம்பக்கூடியதாக உள்ளது. ஆனால் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் (கிழக்கு) பாகிஸ்தானிலிருந்து வெளியேறி இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளார்கள் என்று கூறினால் அது தர்க்கரீதியாகவே நம்பத்தகுந்ததாக  இல்லை (Logically Unbeleivable).

இலட்சக்கணக்கில் நாடு கடத்தப்பட்ட முஸ்லிம்கள்

அஸ்ஸாமில் முஸ்லிம்கள் மீதான தவறான பரப்புரையைத் (False Propaganda) தொடர்ந்து இந்திய அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றியது. அது, “(சட்டவிரோதமாக) குடியேறியவர்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றும் சட்டம், 1950” என்பதாகும். The Immigrants (Expulsion From Assam) Act, 1950. இச்சட்டத்தின் ஷரத்துக்களில் ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

இந்தச் சட்டம் இயற்றுவதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ யாரேனும் அஸ்ஸாமிற்கு வந்து, அங்கு தங்கி இந்தியக் குடிமக்களின் (General Public of  India) நலனுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வகையில் செயல்பட்டால் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் அவர்களை வெளியேற்ற வேண்டும் என இச்சட்டத்தின் ஷரத்து  2 கூறுகின்றது.

இவ்வாறு வெளியேற்றும் அதிகாரத்தை மத்திய அரசு அஸ்ஸõம் மாநில அரசுக்கு வழங்குவதற்கு ஷரத்து 3 வகை செய்கின்றது.

மேலும், இப்போது (1947ல்) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கிழக்கு பாகிஸ்தானில் உள்நாட்டுப் பிரச்சனைகளின் காரணமாகவோ அல்லது அங்குள்ள ஏதாவது பகுதியில் அப்படி ஒரு பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தாலோ, அங்கு குடியிருக்கும் யாரேனும் அங்கிருந்து வெளியேறி அஸ்ஸாமில் குடியேறியிருந்தால் அவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது. (அதாவது, இவர்கள் இச்சட்டத்தின்படி அஸ்ஸாமிலிருந்து நாடு கடத்தப்பட மாட்டார்கள்) என்பதை ஷரத்து 2 (6) கூறுகின்றது.

ஒரு சமூகத்திற்கெதிரான அரசின் தெளிவான பாரபட்சம் இச்சட்டத்தின் மூலம் வெளிப்படுகின்றது. தேசம் பிரிவினையடைந்து 3 வருடங்கள் கழித்து இச்சட்டம் நிறைவேற்றப்படுகின்றது.

ஒரு ஹிந்து பாகிஸ்தான் பிரஜையாக இருந்தாலும் அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளித்து அஸ்ஸாமில் குடியமர்த்தலாம், ஒரு முஸ்லிம் இந்தியப் பிரஜையாக இருந்தாலும் அவரை பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்இந்திய மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் அச்சுறுத்துபவர் என அபாண்டமாக பழிசுமத்தி அவரை நாடுகடத்தி (பங்களாதேஷ்)கிழக்கு பாகிஸ்தான் எல்லையில் கொண்டு போய் விரட்டிவிடுவதும் சரி என்று கூறுகிறது. என்ன கொடுமை சார் இது?

வரம்பற்ற அதிகாரம்

நல்லெண்ணத்தின் அடிப்படையிலோ அல்லது இந்த சட்டத்தைச் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்திலோ ஒரு அதிகாரி, யாரேனும் ஒரு நபருக்கு எதிராக எந்த நடவடிக்கையில் ஈடுபட்டாலும் (அதாவது, சட்டவிரோதமாக குடியேறியவர்கள் எனக் கருதும் நபரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும்) அந்த அதிகாரி மீது யாரும் எந்த விதமான வழக்குத் தொடரவோ அல்லது சட்ட நடவடிக்கைகள் எடுக்கவோ முடியாது. (Sec. 6, Protection to Persons  Acting Under  This  Act : No Suit , prosecution or other legal proceedings shall lie against any person for anything which in good faith done or intended to be done under this act) அதாவது, இந்தச் சட்டத்தை நிறைவேற்றும் அதிகாரிகளைண்  சட்ட நடவடிக்கைகளில் இருந்து பாதுகாப்பதற்கு ஷரத்து 6 அதிகாரமளிக்கிறது.

இப்படி வரம்பற்ற அதிகாரத்தை நிர்வாக அதிகாரிகள், காவல்துறை, பாதுகாப்புப் படையினர் ஆகியோருக்கு வழங்கிய பிறகு இந்திய முஸ்லிம்களை கூட்டம் கூட்டமாக நாடு கடத்தும் பணி  வெளியேற்றும் பணி (Expulsion) இந்திய மற்றும் அஸ்ஸாம் அரசால் முடுக்கி விடப்படுகின்றது.

மற்றொரு சட்டம்  கஐக, 1964

1961 முதல் 1970 வரையுள்ள காலகட்டம் அஸ்ஸாம் முஸ்லிம்களின் வாழ்க்கையில் கடும் திகிலூட்டிய (Black Period) இருண்ட காலகட்டமாகும். ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ (Quilt India Notice) என அரசால் அறிவிப்பு கொடுக்கப்பட்டு கூட்டம் கூட்டமாக அஸ்ஸõம் முஸ்லிம்கள் பங்களாதேஷ் எல்லைக்குள் தூக்கி எறியப்பட்டார்கள்.

1964ம் ஆண்டு அப்போதைய சி.பி.ஐ. இயக்குநர் பி.என். மல்லிக் என்பவரால் பி.ஐ.பி. என (சட்டத்தை போன்ற ஒரு திட்டம்) திட்டம் என அறிமுகப்படுத்தப்பட்டது. அதாவது, பாகிஸ்தானிலிருந்து ஊடுறுவலைத் தடுக்கும் திட்டம் என இதற்கு பெயரிடப்பட்டது. Prevention of Infitration (From Pakistan) Programme, 1964 & (PIP, 1964)

அப்போதைய அஸ்ஸாம் மாநில முதல்வர் பி.பி. சாலிஹா (B.P. Chaliha) வழங்கிய அனுமதியின் பேரில் இத்திட்டத்தின் மூலம் இரவு நேரங்களில் வீடுகளில் இருந்து முஸ்லிம்கள் காவல்துறையினரால் ட்ரக் லாரிகளில் ஆடு, மாடுகளைப்போல் ஏற்றப்பட்டு, கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய பங்களாதேஷ்) எல்லையில் கொண்டு சென்று தள்ளி விடப்பட்டார்கள்.

1962  1966 வரை பி. ஐ . பி. திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 74 ஆயிரம் முஸ்லிம்கள் அஸ்ஸாமிலிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டார்கள். அப்போது வரை ஒரு இலட்சத்து 90 ஆயிரம் அந்நியர்கள் அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்,  அந்நியர்களை வெளியேற்றுவது என்பது இத்துடன் முற்றுப்பெற்றது என்றும் 1969ம் ஆண்டு முதல்வர் சாலிஹா தெரிவித்தார்.

1951 முதல் 1971 வரையிலான 20 வருடங்களில் 17 இலட்சத்து 57 ஆயிரம் பேர் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக அஸ்ஸாமில் குடியேறியவர்கள் எனவும், அதில் 2 இலட்சத்து 47 ஆயிரம் பேர் முஸ்லிம்கள் எனவும் அரசு அறிவித்தது. (பார்க்க தனி அட்டவணை). ஆனால் 1952 முதல் 1973 வரை வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை. 2 இலட்சத்து 70 ஆயிரத்து நாற்பத்தொன்பது பேர்.

1950களின் மறுபக்கம்: நேருலியாகத் ஒப்பந்தம்

1950 மார்ச் 1ம் தேதி இயற்றப்பட்ட, (சட்டவிரோதமாக) குடியேறியவர்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றும் சட்டத்தின் மூலமாக 2,47,000 முஸ்லிம்கள் 20 வருட காலத்தில் அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றப்பட்டதைப் பார்த்தோம். அதன் மறுபக்கத்தை இங்கு காண்போம்.

தேசப் பிரிவினையின் விளைவாக பாதிக்கப்பட்ட இந்துமுஸ்லிம் ஆகிய இரு சமூகங்களையும் மீள்குடியமர்த்தும் விதமாக 1950ம் ஆண்டு ஏப்ரல் 8 அன்று அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் பிரதமர் லியாகத் அலி ஆகிய இருவருக்கும் இடையே நடைபெற்ற ஒப்பந்தம், ‘டெல்லி ஒப்பந்தம்’ என்றும், ‘நேருலியாகத்’ ஒப்பந்தம் என்றும் அழைக்கப்படுகின்றது.

19461950 காலகட்டத்தில் அஸ்ஸாமில் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட 5 முதல் 6 இலட்சம் முஸ்லிம்கள் அஸ்ஸாமிலிருந்து இடம் பெயர்ந்தனர் அல்லது வெளியேறினர். நேருலியாகத் ஒப்பந்தத்தின் பலனாக அஸ்ஸாமிலிருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கு இடம் பெயர்ந்த 2 இலட்சத்து 20 ஆயிரம் முஸ்லிம்கள் மீண்டும் அஸ்ஸாமிற்கு வந்து குடியேறினர். ஆனால், ‘(சட்டவிரோதமாக குடியேறியவர்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றும் சட்டம், 1950)’ என்ற கருப்புச் சட்டத்தின் வழியாகவும், அடுத்து வந்த கஐக திட்டத்தின் வழியாகவும் 1973ம் ஆண்டு வரை தந்திரமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 2 இலட்சத்து 70 ஆயிரத்து நாற்பத்தொன்பது. அப்படியானால், யாரை ஏமாற்ற இந்த ஒப்பந்தம்? ஆக, அரசு கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை அரசே மீறுவதா?

1971க்கு பிறகு...

1971ம் ஆண்டு மார்ச் 25 அன்று பாகிஸ்தானில் உள்நாட்டுப் போர் துவங்கியது. அந்த ஆண்டு டிசம்பர் 16 அன்று அது முடிவுக்கு வந்தது. தற்போதைய பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து ‘பங்களாதேஷ்’ என்று தனி நாடாக உருவானது, இதற்கு முன்பு பாகிஸ்தான் ஊடுருவல்காரர்கள் என பழிசுமத்தப்பட்ட அஸ்ஸாம் முஸ்லிம்கள், பங்களாதேஷ் உருவõனதற்குப் பின்பு பழைய பல்லவியையே புதிய ராகத்தில் பாட ஆரம்பித்தார்கள். அதாவது, வங்கதேச ஊடுருவல்காரர்கள் என முஸ்லிம்கள் மீது பழி சுமத்தத் துவங்கினர்.

assam mulims












வங்கதேசத்தவர் ஊடுருவல் என்பது உண்மையா?

ஏற்கனவே, கடந்த 20 வருடங்களாக (19511971) வெளிநாட்டவர் என குற்றம் சுமத்தப்பட்டு அஸ்ஸாம் முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக கிழக்கு பாகிஸ்தானிற்கு (தற்போதைய வங்கதேசத்திற்கு) துரத்தியடிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்லாது, அஸ்ஸாம் முஸ்லிம் ஜனத் தொகையில் 80% பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், மறுபுறமோ பங்களாதேஷ் என்ற முஸ்லிம்களுக்கான மற்றொரு தனி நாடு உருவாக்கப்பட்டுவிட்டது. பெங்காலி மொழி (வங்காள மொழி) பேசும்  முஸ்லிம்கள் தங்களுடைய பங்களாதேஷ் நாட்டிலேயே சுயமரியாதையுடனும், கண்ணியத்துடனும், பயமின்றியும் வாழ முடியும். இப்படிப்பட்ட பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கையை தொடரும் சூழ்நிலையில் உள்ள தங்கள் நாட்டை விட்டுவிட்டு, பாதுகாப்பற்ற நிலையில்  சுய மரியாதையை இழந்து, அணுதினமும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு வீண் பழி சுமந்து வாழ்வதற்கு அஸ்ஸாமிற்கு வருவார்களா? இது தர்க்க ரீதியாகவே (Logically  Un Accepttable Anaccuplabel) ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் இருக்கிறதா?

சிந்தித்து, சீர்தூக்கி ஆராயுமாறு வாசகர்களின் முடிவுக்கே இதனை விட்டு விடுகிறோம்.

அஸ்ஸாம் இயக்கம்

1971ல் பங்களாதேஷ் உருவானதைத் தொடர்ந்து மீண்டும் வங்கதேசத்தவர்கள் அஸ்ஸாமிற்குள் சட்டவிரோதமாக குடியேறி விட்டார்கள் எனப் பழிசுமத்தி ‘அந்நியர்களை வெளியேற்றும் இயக்கம்’ (Forieners Depontation Movement) என 1979ம் ஆண்டு அனைத்து அஸ்ஸாம் மாணவர் இயக்கம் (AASU) மற்றும் அனைத்து அஸ்ஸாம் கண சங்கரம் பரிஷத் (AAGSP) ஆகியவை இணைந்து துவக்கின.

அஸ்ஸாம் இயக்கம் (Assam Movement) என அறியப்பட்ட இந்தப் போராட்டம் 1985 வரை ஏறத்தாழ 6 வருடங்கள் நீடித்தது. “நாங்கள் எங்கள் இரத்தத்தைக் கூட சிந்துவோம். ஆனால் அஸ்ஸாமை விட்டுக் கொடுக்க மாட்டோம் (We will give Blood, but not Assam)” என்பது இதன் முக்கிய முழக்கங்களில் ஒன்றாக இருந்தது.

ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தியா முழுவதும் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, 1981ம் ஆண்டு அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டும் நடைபெறவில்லை. காரணம், இவர்கள் அதை அனுமதிக்கவே இல்லை. அஸ்ஸாம் முஸ்லிம்களை இந்தியப் பிரஜைகளாக அங்கீகரிக்கும் இந்த கணக்கெடுப்பில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இணைவதைத் தடுக்கவே இந்த சதி.

தேர்தல் புறக்கணிப்பு  பங்கேற்பு

1983ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் அஸ்ஸாமில் சட்ட சபைக்கான பொதுத்தேர்தலை அறிவித்தது. அஸ்ஸாம் இயக்கத்தினர் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தனர். தேர்தலில் ஒட்டுப்போட விட்டால் போராட்டக் குழுவினரின் கொடுங்கரங்களில் இருந்து உங்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிக்க மாட்டோம் என அரசு நிர்வாகத்தினர் சிறுபான்மையினரை மிரட்டவே, வேறு வழியின்றி ஜனநாயகத்தைப் பாதுகாக்க பெரும் நம்பிக்கையுடன் ஓட்டளித்தனர்அஸ்ஸாம் முஸ்லிம்கள். அன்றைய தினம் இராணுவம் வந்து அவர்களின் கிராமங்களில் பாதுகாப்பு வழங்கியது. இந்த பாதுகாப்பும் அன்று ஒருதினம் மட்டுமே வழங்கப்பட்டது.

முஸ்லிம்கள் தேர்தலில் வாக்களித்ததால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் மறுநாள் பிப்ரவரி 18 அன்று சங்பரிவார்களுடன் இணைந்து நெல்லி மற்றும் சாவோல்கோவா ஆகிய கிராமங்களில் ஒரே இரவில் 3519 முஸ்லிம்களை கொலை செய்தனர்.

இந்த படுகொலைக்கு மூளையாக செயல்பட்ட அனைத்து அஸ்ஸாம் மாணவர் இயக்க தலைவர் ஜோய் நாத் ஷர்மா ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்டாக செயல்பட்டவர் என பின்னாளில் வெளிச்சத்திற்கு வந்தது.

சட்டவிரோதமாக குடியேறிய அந்நியர்களின் எண்ணிக்கை என குறிப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு குழுக்கள் ஒவ்வொன்றும் 13 இலட்சம், 40 இலட்சம், 45 இலட்சம், 77 இலட்சம் என விதவிதமான எண்ணிக்கைகளைக் கூறினர்.

ஐ.எம்.டி.டி. (IMDT) சட்டம்

அந்நியர்களைக் கண்டறிந்து வெளியேற்ற, 1983ம் ஆண்டு அக்டோபர் 15 அன்று “சட்டவிரோதமாக குடியேறிவர்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் தீர்ப்பாயச் சட்டம்  llegal Migrants (Determination by Tribunal) Act,  1983” மத்திய அரசõல் இயற்றப்பட்டது. IMDT ACT 1983 என இது அழைக்கப்படுறது.

அஸ்ஸாம் உடன்படிக்கை

அரசுடன் போராட்டக்குழுவினர் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக 1985 ஆகஸ்ட் 15 அன்று நள்ளிரவில் டெல்லியில் ‘அஸ்ஸாம் உடன்படிக்கை’ (Assam Accord) கையெழுத்தானது. அந்த உடன்படிக்கையின்படி, 1971 மார்ச் 25க்கு முன்பு (கிழக்குபாகிஸ்தானில் இருந்து அஸ்ஸாமிற்கு வந்து) இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்கள் இந்தியர்களாக கருதப்படுவார்கள். அதற்குப்பின் ஊடுருவியவர்கள் ஜாதி, மதம் பாராமல் வெளியேற்றப்படுவார்கள் என முடிவானது.

ஆனால், அந்தோ பரிதாபம்! இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு, 19511971 வரையிலான காலக்கட்டத்தில் அஸ்ஸாமிலிருந்து ஒரு லட்சத்து 90 ஆயிரம் முஸ்லிம்கள் அநியாயமõக வெளியேற்றப்பட்டுள்ளனரே! இதனை யார் கேட்பது?

பங்களாதேஷிலிருந்து 60 முதல் 75 இலட்சம் இந்துக்கள் இந்தியாவில் குடியேறி இருக்கிறார்கள். மேற்கு வங்கம், அஸ்ஸாம், மஹாராஷ்டிரா மாநிலங்களில் இவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்நியர்களை வெளியேற்றுவதென்றால் இவர்களையும் வெளியேற்ற வேண்டியது தானே? எனக் குறிப்பிடுகிறது 1998 ஆகஸ்ட் 26ம் தேதி வெளிவந்த ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்.

அஸ்ஸாம் கன பரிஷத்

அனைத்து அஸ்ஸõம் மாணவர் இயக்கத்தின் மிகப்பெரும் வெற்றியாக அஸ்ஸாம் உடன்படிக்கை பார்க்கப்பட்டது. இந்த உடன்படிக்கையின் படி கூட்டம் கூட்டமாக அஸ்ஸாம் முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிட்டு, இவ்வியக்கம் அஸ்ஸாம் கண பரிஷத் என்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 1985 ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியையும் பிடித்தது.

ஆனால் ஆட்சியதிகாரம் கையிலிருந்த போதிலும் இந்த 5 ஆண்டுகளில் வெறும் 1,000 பேரைத்தான் இவர்களால் அந்நியர் என முத்திரை குத்தி வெளியேற்ற முடிந்தது.

அப்படியானால், இலட்சக்கணக்கில் வங்க தேச முஸ்லிம்கள் ஊடுருவியுள்ளனர் என்ற பிரச்சாரம் ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய் என்பது இங்கே நிரூபணமாகிறது.

போடோ தீவிரவாதிகள்

1980களில் அஸ்ஸாம் போராட்டக் குழுவினரின் கிளர்ச்சியை வலுப்படுத்துவதற்கான பழங்குடியின குழுக்கள் இணைந்து அனைத்து போடோ மாணவர் சங்கம் (ABSU) என்ற இயக்கத்தைத் துவக்கினர். இவர்கள் 1994ம் ஆண்டு கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை கொலை செய்தனர். போடோலாந்து என்ற தனி நாடு கோரிக்கையை முன்வைத்து இவர்கள் இயக்கம் நடத்தினர். இந்த இயக்கத்தில் ஏற்பட்ட பிரிவினையின் காரணமாக இவர்கள் அரசியலிலும் கால் பதித்தனர்.

சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் ( D" Voters )

1996ம் ஆண்டு அஸ்ஸாம் கண பரிஷத் இரண்டாம் முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அவர்கள் கூற்றுப்படி சட்ட விரோதமாக வெளியேறிய அந்நியரை கூட்டம் கூட்டமாக வெளியேற்ற இந்த முறையும் அவர்களால் ஒரு அரசியல் தீர்வை கொண்டு வர முடியவில்லை (Could not bringout Political Solution) ஏனெனில் இவர்கள் அனைவரும் இந்தியப் பிரஜைகளே, இவர்களை இலட்சக்கணக்கில் வெளியேற்ற எந்த முகாந்திரமும் இல்லை.

 ஆகவே இந்த முறை அஸ்ஸாம் கன பரிஷத் வேறு ஒரு தந்திரத்தைக் கையாண்டது. அதாவது, இந்தியத் தேர்தல் ஆணையத்தை சரிக்கட்டி, வாக்காளர் பட்டியலில் இவர்களின் பெயருக்கு முன்னால் ‘D’ என்ற எழுத்தை சேர்க்க வைத்தது. அதாவது, இதன் பொருள் என்னவென்றால், ‘D’ Voters,  Doubtful Voters, சந்தேகத்திற்குரிய வாக்காளர் என்பதாகும்.

சந்தேத்திற்குரிய வாக்காளர்கள் என்பது சந்தேகத்திற்குரிய குடிமக்கள் என்பதாகும். (Doubtful Citizens) என்பதாகும். இந்திய தேசத்தில் வேறு எந்த சமூகத்திற்கும் பிரயோகப்படுத்தப்படாத சொற்பதம் (அஸ்ஸாமிய மொழி பேசும் மற்றும் வங்காள மொழி பேசும்) அஸ்ஸாம் முஸ்லிம்களுக்கு பிரயோகிக்கப்படுகின்றது. துரதிஷ்டவசமாக முஸ்லிம்களைப் போல் சில இந்துக்களுக்கும் இதேப்போன்று "D' -  Voters, சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என்று சொற்பதம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. மிகக்குறைவான அளவில் வங்காள மொழி பேசும் இந்துக்களும் இந்தப் பழி சொல்லுக்கு இதுபோல் ஆளாக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என குற்றம் சாட்டப்பட்டு தங்கள் வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு பல வருடங்களாக முகாம்களில் (Detention Camps) வாடிக் கொண்டிருக்கும் முஸ்லிம்கள் ஏராளம் ஏராளம்.

சந்தேகத்திற்குரிய வாக்காளர் என்பது உண்மையா?

கோல்பாரா மாவட்டம் திப்லாய் பகுதியைச் சேர்ந்த 50 வயது நிரம்பிய பள்ளி ஆசிரியர் சம்சுல்ஹுதா. இவர் கடந்த தேர்தல்களின் போது வாக்குச்சாவடியாக செயல்பட்ட அதே பள்ளிக்கூட பூத்தில் தேர்தல் அதிகõரியாக பணியாற்றியவர். அவருக்கு இந்திய பாஸ்போர்ட் உள்ளது. இதன் மூலம் அவர் ஹஜ்ஜுக்கும் சென்று வந்துள்ளார். ஆனால் என்னவோ தெரியவில்லை. கடந்த 2011ம் ஆண்டு அரசுக்கு திடீரென ஞானோதயம் பிறந்து அவர் பங்களாதேஷிலிருந்து சட்ட விரோதமாக குடியேறியதாக அறிவித்தது. அவருடைய வாக்காளர் அடையாள அட்டையில் 'D' என குறியிட்டுக் கொடுத்தது.

இப்படி 1971 முதல் 2011 ஜனவரி 31 வரை 4 இலட்சத்து 61 ஆயிரத்து 451 பேர் சந்தேகத்திற்குரிய வாக்காளர்களாக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும் பகுதியினர் முஸ்லிம்களே.

திப்லாயைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் காஞ்சன் நிசா. திடீரென ஒரு நாள் இரவு வீட்டிலிருந்த அவரை உள்ளுர் போலீஸார் அழைத்துச் செல்கின்றனர். வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, முதலான ஆவணங்களை கேட்க்கின்றனர். அவரிடம் அந்த ஆவணங்கள் இல்லாததால் நிசா எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, முகாம் எனப்படும் திறந்தவெளி சிறையில் (Detention Camp) அடைக்கப்படுகின்றார். அங்கேயே அவருக்கு குழந்தை பிறக்கின்றது. குழந்தையை அவரிடமிருந்து பிரித்து விடுகின்றனர் எல்லை பாதுகாப்புப் படையினர். 3 மாதம் 7 நாட்கள் கழித்து அவர் அங்கிருந்து விடுவிக்கப்படுகின்றார். ஆனால் குழந்தை திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. பறிக்கப்பட்ட அவருடைய குழந்தை நிச்சயம் இறந்திருக்கும் என்று அவர் கண்ணீர் வடிக்கின்றார்.

தனது பங்கிற்கு உச்சநீதிமன்றமும்...

அந்நியரின் குடியுரிமையை தீர்மானிக்கும் ஐ.எம்.டி.டி. (IMDT)  சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி அஸ்ஸாம் இயக்கத் தலைவர்களில் ஒருவரான சர்பானந்தா சனோவால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் (இவர் கடந்த பாராளுமன்றத் தேர்தலிலே பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிட்டார். தற்போது பா.ஜ.க. வின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார்). இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் கடந்த 2005 ஜூலை 12 அன்று ஐ.எம்.டி.டி. சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதன் மூலம் தன்னால் இயன்ற அநீதியை உச்சநீதிமன்றமும் அஸ்ஸாம் மக்களுக்கு இழைத்தது.

ரத்து செய்யப்பட்ட ஐ.எம்.டி.டி. தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளும், இனி புதிதாக வரும் வழக்குகளும் ‘வெளிநாட்டவர் சட்டம், 1946’ (The Foriegnrs Act 1946) மற்றும் ‘வெளிநாட்டவர் தீர்ப்பாய ஆணை, 1964  The Foriegnrs (Tribunal) Order 1964 ஆகிய சட்டங்களின்படி விசாரிக்கப்பட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது.

சங்பரிவார்கள் மற்றும் சங்பரிவார பின்புலம் கொண்டவர்கள் ஐ.எம்.டி.டி. சட்டத்தை எதிர்த்ததற்கு காரணம், “அந்நியர் என குற்றம் சாட்டப்படும் ஒருவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் பிடித்துக் கொண்டு வந்து இந்த தீர்ப்பாயத்தின் முன் நிறுத்தினால், இச்சட்டத்தின்படி அவரை வெளிநாட்டவர் என அரசுதான் நிருபிக்க வேண்டும்.

ஆனால், வெளிநாட்டவர் சட்டத்தின்படி தன்னை ஒரு இந்தியப் பிரஜை என நிரூபிக்கும் பொறுப்பு குற்றம் சுமத்தப்பட்டவரின் மீதõகும்.

மனம் போன போக்கில் வெளிநாட்டவர் எண்ணிக்கை

பா.ஜ.க. ஆசிபெற்ற அஸ்ஸாம் மாநில கவர்னர் லெப்டினண்ட் ஜெனரல் கு.ஓ. சின்ஹா 1998 நவம்பர் 8 அன்று குடியரசுத் தலைவருக்கு வெளிநாட்டவர் குறித்து ஒரு அறிக்கை  அனுப்பினார். அந்த அறிக்கையில், “1991ம் ஆண்டு வரை அஸ்ஸாமில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டவர் எண்ணிக்கை 90 இலட்சம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய அறிக்கையின்படி பார்த்தால் அஸ்ஸாமில் உள்ள மக்களில் மூவரில் ஒருவர் வெளிநாட்டவர், மேலும் பங்ளாதேஷ் எல்லை வழியாக ஒவ்வொரு நாளும் 6000 பேர் ஊடுருவி அஸ்ஸõமிற்குள் வருகிறார்கள் என அர்த்தம்.  அப்படியானால் எல்லைப் பாதுகாப்புப் படை எங்கே போனது? இதெல்லாம் சாத்தியமா என்பதை வாசகர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றோம்.

என்று தீரும் இந்த வழக்குகள்? என்று தணியும் இந்தக் கொடுமைகள்?

மூன்று வகையாகப் பிரிக்கப்பட்ட வழக்குகள் வெளிநாட்டவர் தீர்ப்பாயங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

1. வங்கதேசத்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸாரால் பிடிக்கப்பட்டு நேரடியாக தினமும் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 95,745

2.  ஐ.எம்.டி.டி. சட்டம்  உச்சநீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டவுடன் அதிலிருந்து வெளிநாட்டவர் தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 88,770

3. சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என 1997 முதல் 31.01.2011 வரை அரசால் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 2,21,936

ஆக மொத்தம், 4,06,451  வழக்குகள்.

மேற்கண்ட 2,21,936 வழக்குகளில்  கடந்த 13 ஆண்டுகளாக வெறும் 83,471 வழக்குகள் தான் முடிக்கப்பட்டிருக்கின்றன.

அவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்ட 83,471 வழக்குகளில் வெறும் 5,577 வழக்குகள் தான் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, 6.7% மட்டுமே வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருந்த 93.3% வழக்குகளில் 77,900 பேர் இந்திய பிரஜைகள் என உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

அன்னியர் என தீர்ப்பளிக்கப்பட்ட இந்த 6.7% பேரில், தீர்ப்பாயம் அனுப்பிய நோட்டீசை சம்பந்தப்பட்டவர் பெற்றுக் கொள்ளாததால் அது மீண்டும் தீர்ப்பாயத்திற்கே திரும்பி வந்தது. நோட்டீசை பெற்றுக் கொண்டவர் வாயிதா தினத்தன்று ஆஜராகாமல் இருந்தது என பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடைமுறையை பின்பற்றுவதில் ஏற்பட்ட சிறு சிறு குறைபாடுகளின் காரணமாகவும் அன்னியர்கள் என தீர்ப்பளிக்கப்பட்ட ஏராளமான நபர் இதில் அடங்குவர்.

(Among 6.7% people were declared as foreigners by the Tribunal, many of them are due to some technical reasons like non-receipt of notices, Ex-parte order)

விசாரணையில் இந்தியப் பிரஜைகள் (genuine citizens) என தீர்ப்பாயத்தால் உறுதி செய்யப்பட்ட 93.3% மக்கள், அதாவது 77,900 பேர் கடந்த பல வருடங்களாக எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி வெளிநாட்டவர்கள்வந்தேறிகள்பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக ஊடுருவியர்கள் என அபாண்ட பழி சுமத்தப்பட்டு துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். முகாம்கள் என அழைக்கப்படும் detention camp களில் அதாவது detention camp களில் இத்தனை வருடங்களாக அவர்கள் தொலைத்த வாழ்க்கையை யார் திருப்பிக் கொடுப்பார்கள்?

ஒரு வருடத்திற்கு 6,420 வழக்குகள் என்ற விதத்தில் முடிக்கப்பட்டுள்ளது.

புதிய வழக்குகள் ஏதும் வராதிருந்தால், இப்போதுள்ள நிலையில் எஞ்சியுள்ள 3,22,980 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளிக்க 50 வருடங்கள் ஆகும். வழக்கு விசாரணையில் நிலைமை இதேபோல் தொடர்ந்தால் அனைவரும் செத்து சுண்ணாம்பாக வேண்டியது தான்.

போலீஸாரால் அணுதினமும் பிடித்துக் கொண்டு வந்து புதிய வழக்குகள் சேர்க்கப்பட்டால் நிலைமை மேலும் பரிதாபகரமானதாகும். ஆனால், ஒவ்வொரு நாளும்  புதிய வழக்குகள் வந்து கொண்டிருப்பது நிற்கவில்லை.

முகாம்களில் செத்து அடக்கம் செய்யப்பட்ட பிறகு இறந்தவரின் பேரனிடத்திலோ அல்லது கொள்ளுப் பேரனிடத்திலோ கூறுவார்கள், “உன் தாத்தா இந்தியப் பிரஜைதான் என்று”

பாழாய்ப் போன நீதி, தலை முறைகள் தாண்டி நாசமாய்ப் போவதை வரலாறு உரக்கக் கூறி நிச்சயம் பதிவு செய்யும், ஆனால் என்ன செய்வது, கேட்கும் சக்தியை இறைவன் எலும்புக்கூடுகளுக்கு வழங்கவில்லையே, வழங்கப்பட்டது வஞ்சக நீதி என்பதைப் புரிந்து கொள்ள!

 1951 முதல் 1971 வரை சட்டவிரோதமாக குடியேறிய முஸ்லிம்கள் என அரசால் குற்றம் சாட்டப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 47 ஆயிரம்.

 ஆனால் 2002ம் ஆண்டு வரை வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையோ 3 இலட்சத்து 29 ஆயிரத்து 727 பேர்.

 வெளிநாட்டவர் என குற்றம் சாட்டப்பட்டு முகாம்களில் இன்னும் இருப்பவர்கள் 3 இலட்சத்து 22 ஆயிரத்து 980 பேர்.

1951 முதல் 1971 வரை இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதால் சதவிகிதம் குறைந்து கொண்டே வந்தது. 1971க்குப் பிறகு, ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் வெறும் 2 சதவிகிதம் மட்டுமே கூடியுள்ளது.

அரசு கூறும் கணக்கைப் போல் வங்கதேசத்திலிருந்து இலட்சக்கணக்கில் முஸ்லிம்கள் ஊடுருவியிருந்தால், வளர்ச்சி விகிதம் தாறுமாறாக அதிகரித்திருக்க வேண்டும்.

குடியுரிமைக்காக குரல் கொடுப்போம்

அபாண்டப் பழிசுமத்தப்பட்டு, ஆறு தசாப்தங்காளக(அறுபதுவருடங்களாக) சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு, அற்பபுழுக்களைப்போல் நடத்தப்பட்டு பாதுகாப்பற்ற நிலையில் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய பிரஜைகளான அஸ்ஸாமிய மொழிபேசும் மற்றும் வங்காள மொழிபேசும் முஸ்லிம்கள், வங்காள மொழி பேசும் இந்துக்கள் ஆகியோரின் குடியுரிமைக்காக குரல் கொடுப்போம்.

“உடுக்கை இழந்தவன் கைபோல  ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு” என்ற வள்ளுவரின் கூற்றிற்கிணங்க, அவமான சின்னமான ‘சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள்’ (D Voters - Doubtful Voters)    என்ற கேவலமான பட்டத்தை சுமந்து வாழும் சககுடிமக்களின்  (Fellow Citizens) களங்கத்தை துடைக்க ஒன்றிணைந்து போராடுவோம். நட்பிற்கும் சகோதரத்துவத்திற்கும் இலக்கணமாக, நீதியின் போராளிகளாய் இந்தியக் குடிமக்களõகிய நாம் வாழ்ந்து காட்டுவோம்.

நன்றி :
விடியல் வெள்ளி மாத இத

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza