போபால்: ராகுல் ஜோஸி முன்னால் பஜ்ரங் தள் தீவிர உறுப்பினர்.
பஜ்ரங்தளத்தினரின் தீவிரவாத செயல்களில் வெறுப்புற்று அதிலிருந்து விலகுகிறார் ராகுல் ஜோஸி. என்எஸ்யுஐ என்ற மாணவர் அமைப்பில் சேர்ந்து தனது பணியை தொடர்கிறார். பொறுக்குமா இந்துத்வாவுக்கு. இவரது பழைய நண்பர்கள் திரும்பவும் இந்துத்வாவில் ஐக்கியமாக வற்புறுத்தியுள்ளனர். ஆனால் ராகுல் மசியவில்லை. கோபம் கொண்ட பஜ்ரங்தளத்தினர் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதோடு விடாது கெரசினை அவர் உடலில் ஊற்றி தீ வைத்துள்ளனர். உடல் முழுக்க வெந்த நிலையில் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளார் ராகுல். நான்கு நாட்கள் மருத்துவர்கள் கடுமையாக போராடியும் ராகுலை காப்பாற்ற முடியவில்லை.
செப்டம்பர் 4 ந்தேதி ராகுலின் உயிர் மருத்துவ மனையில் பிரிகிறது. இறப்பதற்கு முன் பிஜேபியின் மாணவர் அமைப்பான ஏபிவிபி யும் பஜ்ரங் தளத்தினரும் சேர்ந்து தன்னை அடித்து தன்மேல் கெரசின் ஊற்றியதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.. இவரது மரண வாக்கு மூலத்தின் படி சம்பந்தப்பட்ட பஜ்ரங் தளத்தினரையும் பிஜேபி மாணவர் அமைப்பிலும் நான்கு பேரை காவல் துறை கைது செய்துள்ளது. ராகுல் வீட்டுக்கு ஒரே பிள்ளை. தங்களது ஒரே பிள்ளையையும் இந்துத்வாவின் வெறிக்கு பலி கொடுத்து சோகத்தில் உள்ளனர் பெற்றோர்.
என்எஸ்யுஐ யின் தலைவர் ரோஹித் சௌத்ரி பத்திரிக்கையாளர்களிடம் சொல்லும் போது 'ஆர்எஸ்எஸின் நடவடிக்கை எவ்வாறு இருக்கும் என்பதும் அதன் மாணவர் அமைப்பான அகில பாரதீய வித்யார்தி பரிஷத்தின் செயல்கள் எந்த விதத்தில் இருக்கும் என்பதற்கு இந்த கொடூர கொலை சிறந்த உதாரணம். நாங்கள் கவர்னரை சந்தித்து இந்துத்வ அமைப்புகளை தடை செய்யச் சொல்லி மனு கொடுக்கப் போகிறோம்' என்றார்.
பிஜேபி ஆளும் மத்திய பிரதேசத்தில்தான் இந்த நிலை. சிறிது ஆள்வதற்கு வாய்ப்பளித்தாலே இந்த ஆட்டம் போடும் இந்துத்வா நாளை முழு இந்தியாவையும் இவர்கள் கையில் கொடுத்தால் இன்னும் என்னவெல்லாம் ஆட்டம் போடுவார்களோ! ஒரு அமைப்பிலிருந்து விலகி வேறொரு அமைப்பில் சேர்வது கெரசின் ஊற்றி கொளுத்தும் அளவுக்கு மாபாதக செயலா என்ன? இந்துத்வாவின் கோர முகம் நமது நாட்டை இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ!
இவ்வளவு பப்ளிக்காக நடந்த இந்துத்வாவின் கொலையை பற்றி தினமலரோ தினமணியோ எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும்.
http://articles.timesofindia.indiatimes.com/2012-09-05/bhopal/33615027_1_nsui-student-betul-district-bajrang-dal-activists
http://www.dayafterindia.com/detail.php?headline=content&catid=3826.
SOURCE: http://www.popularfrontnellai.com/2012/12/blog-post_1808.html
0 கருத்துரைகள்:
Post a Comment