Wednesday, December 5, 2012

உள்துறை செயலாளர்,முதல்வரின் தனி அலுவலரிடம் SDPI கட்சி கோரிக்கை !


தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தலித்துகள் மீதான சாதிய வன்முறையை தொடர்ந்து எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் உண்மையறியும் குழு கள ஆய்வு செய்தது.அதன் அறிக்கை அடங்கிய கோரிக்கையை கடந்த 03.12.2012 அன்று மாநில செய்திஊடக பொறுப்பாளர் செய்யது இப்ராஹீம் கனி தலைமையில் முதல்வரின் தனி அலுவலரிடம் அளிக்கப்பட்டது.
மேலும் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறையினால்  பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று லட்சம் வழங்க வேண்டும்,சேதமடைந்த  வீடுகளை அரசு செலவில் கட்டிக்கொடுக்க வேண்டும்,உண்மையான குற்றவாளிகளை கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும், 15 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து இதனால் பல நோய்களுக்கு ஆளாகி மரணப்படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் அபுதாகிர் கருணை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல் படுத்த பட வேண்டும்.

  என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை  உள்துறை செயலாளரிடம் அளிப்பதற்காக  நேற்று(04.12.2012) எஸ்.டி.பி.ஐ மாநிலச் செயலாளர் அப்துல் சத்தார் அவர்கள் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் ரெத்தினம் அண்ணாச்சி,மாநில செய்திஊடக பொறுப்பாளர் செய்யது இப்ராஹீம் கனி,வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது ரஷீது,தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் முஹம்மது ஸாலிஹ்,செயலாளர் சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமை செயலகம் சென்று கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza