மும்பை 7/11 புறநகர் ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில், அப்பாவிகளை சிக்கவைத்துள்ள போலீசின் தவறுகளை "மோப்பம்" பிடித்துவிட்டதாக தெரிவித்த நீதிபதி "அபை தப்சே" நீதிமன்றத்தின் "சந்தேகம்" உறுதியாகிவிட்டால், "கடுமையான தீர்ப்பு" வழங்கப்படும்,என்று எச்சரித்தார்.
இந்த வழக்கில் போலீசின் "தகிடு தத்தங்"களின் விவரமாவது:
மும்பை லோக்கல் ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் "தொலைபேசி உரையாடல்"களை முக்கிய ஆதாரமாக சொல்லப்பட்டு, அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், குண்டுவெடிப்பின்போது சம்பவ இடத்தில் இருந்ததாகவும், அவர்கள் தங்களுக்கிடையில் பேசிக்கொண்டதாகவும் "புலனாய்வுத்துறை" கூறியிருந்தது.
தொலைபேசி உரையாடலின் "CDR" (டேப்) மற்றும் சம்பவம் நிகழ்ந்தபோது அவர்கள் எங்கிருந்தனர்? போன்ற "தொலைதொடர்பு" ஆதாரங்கள் குறித்து கேள்வியெழுப்பியபோது, அது குறித்த ஆவணங்கள் அழிந்து விட்டதாக, அரசு வக்கீல் கூறி இருந்தார்.
கடந்த 2006 நவம்பர் 24ந்தேதி போலீஸ் தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையின் "நான்காம் பகுதி"யின் " 7ம்பத்தி"யில், ஆதாரமாக சேர்க்கப்பட்டுள்ள "தொலைபேசி உரையாடல்" சம்மந்தப்பட்ட "டேப்" தேவையில்லை எனக்கருதி, அழித்து விட்டதாக கூறுவதை ஏற்க முடியாது என்ற நீதிபதி, புலனாய்வுத்துறை வசம் அந்த டேப் இருந்தால், அதனை டிசம்பர் 3ந்தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.
குற்றப்பத்திரிக்கை மற்றும் போலீஸ் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை உற்றுநோக்கும்போது, சந்தேகத்தின் "ஸ்மெல்" அடிப்பதாகவும், அந்த சந்தேகம் உறுதியாகி விட்டால், அனைத்து அதிகாரிகளுக்கு எதிராகவும் "கடுமையான தீர்ப்பு" சொல்ல வேண்டிவரும் என எச்சரித்தார்,நீதிபதி அபை தப்சே.
போலீசின் "மாயாஜால" காட்சி 2 :
கடந்த 2008ல், "இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள்" என கைது செய்யப்பட்ட 3 நபர்கள், தாங்கள் தான் மும்பை லோக்கல் ரயிலில் குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டு "வாக்குமூலம்" அளித்ததாக கூறி, அந்த மூவரையும் சிறையில் தள்ளியுள்ளது, இப்போது வெளிச்சமாகியுள்ளது.
தீவிரவாத குற்றம் சுமத்தி கைது செய்யப்பட்ட அவர்களிடம் "ஒப்புதல் வாக்குமூலம்" பெற்றதாக "3 டெபுட்டி போலீஸ் கமிஷனர்கள்" குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுத்துள்ளனர்.
எனவே, அந்த உயரதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கில் ஏற்பட்டுள்ள "குளறுபடிகளுக்கு" பதில் சொல்ல வேண்டியுள்ளது, குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவிகள்:-
கமால் அஹ்மத் அன்சாரி, டாக்டர் தன்வீர் அஹ்மத், முஹம்மத் பைசல் ஷேக், இஹ்திஷாம் சித்தீகி, முஹம்மத் மாஜித் ஷரீப், ஷேக் ஆலம், முஹம்மத் சாஜித் அன்சாரி, அப்துல் வாஹித், முசம்மில், சுஹைல் மஸ்வூத், சமீர் அஹ்மத், நவீத் ஹுசைன் மற்றும் ஆசிப் கான் ஆகிய 13 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
source: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/647--711-
source: http://www.maruppu.in/all-medias/43-maruppu-news/647--711-
0 கருத்துரைகள்:
Post a Comment