ஏன் திடீரென தினமலர் பற்றி? தினமலரைப் பற்றி மட்டும்தான் எப்போதுமே எழுதலாம்! ஏனெனில் தினம் தினம் ஏதாவது விஷத்தை கக்கும் கேவலத்தை செய்வது தினமலர் மட்டுமே. கட்டுரையின் இறுதியில் வைகோவைப் பற்றிய தினமலரின் சேட்டையைக் குறிப்பிட்டுள்ளேன். அதற்குமுன் கீழே தினமலரின் பொறுக்கித்தனங்களுக்கு வகைக்கு ஒன்றாக உதாரணங்கள் கொடுத்துள்ளேன்.
பல வருடங்களுக்கு முன், வாஜ்பாய் இந்தியப் பிரதமராகவும், முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராகவும் இருந்த காலகட்டம் அது. அப்போது ஐ.நாவில் பல்வேறு நாடுகள் பங்கேற்ற ஒரு மிக முக்கியமான மாநாட்டைப் பற்றி தினமலர் இப்படி செய்தி வெளியிட்டது, " மாநாட்டில் வாஜ்பாய் முஷாரஃப் உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்று. இந்தியா, பாகிஸ்தான் மட்டுமன்றி உலகமே இரு நாடுகளின் சிதைந்து கொண்டிருக்கும் உறவை பதற்றத்துடன் பார்த்துக்கொண்டிருக்கும் போது தினமலர் ஏதோ இருநாட்டு பிரதிநிதிகளையும் 'நாய்' போல சித்தரித்து 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என செய்தி வெளியிட்டிருந்தது. முதன்முதலில் தினமலர் என்ற செய்தித்தாள், மேஜை துடைக்கக்கூட லாயக்கில்லாத காகிதமாகப் பட்டது அன்றுதான். பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு தினமலர் மட்டுமே சரியான உதாரணம்.
மேலே இருக்கும் படத்தில் உள்ள பெண்களைப் பாருங்கள். கல்லூரி மாணவிகளின் உடை சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தபோது தினமலர் வெளியிட்ட படம் இது. அரை பக்கத்திற்கு இந்த ஆறு மாணவிகளை candid (தங்களை யாரோ படம் பிடிப்பது, படம் பிடிக்கப்படுபவருக்கு தெரியாது) ஆக படம்பிடித்து வெளியிட்டிருந்தது. எவ்வளவு பெரிய பொறுக்கித்தனம் இது? இதே விஷயத்தை செல்ஃபோன் வைத்து செய்பவனை தானே 'ஈவ் டீசிங்' எனப் பிடித்து சிறையில் தள்ளுகிறார்கள்? இப்படி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் ஆறு அப்பாவி மாணவிகளின் அந்தரங்கத்தை எட்டிப் பார்த்து, அவர்களின் படத்திற்கு கீழே "ஆபாசமாக உடையணியும் மாணவிகளை மக்கள் எதிர்க்கவேண்டும்" என்று குறிப்பு வேறு வெளியிட்டிருந்த தினமலரை என்ன செய்வது? அதன் ஆசிரியரை அல்லவா முதலில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டும்? இப்படியொரு தப்பான செய்திக்காக தங்கள் பெண்பிள்ளைகளின் படம் செய்தித்தாளில், அதுவும் முதல் பக்கத்தில் வந்திருப்பதைப் பார்த்த அந்த பெற்றோர் மனம் எவ்வளவு வேதனைப் பட்டிருக்கும்? இதுதான் தினமலர் தனக்கு இருப்பதாகக் கூறிக்கொள்ளும் சமூக அக்கறையா?
இது போன்ற ஏராளமான கேவலம் பிடித்த செயல்களை தினமலர் செய்து கொண்டே தான் இருக்கிறது. காரைக்குடியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் சந்திப்பில் ஓய்வு நேரத்தில் நாற்காலியில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருந்த துணைவேந்தர்கள் மூவரை தூங்கும்போது படம் பிடித்து அந்தப் படத்தின் கீழ் தன் பாணியில் நக்கலாக செய்தியும் போட்டிருந்தது தினமலர்.
தூங்கும் போது ஒருவரை படம் எடுக்கலாமா? நம் தனிப்பட்ட நண்பர்களிடம் கூட நாம் செய்யக் கூசும் செயல் அது. அந்தப் படத்தைப் பார்த்த லட்சக்கணக்கான மாணவர்களின் மனதில் எந்த விதமான தாக்கத்தை அது உண்டு பண்ணியிருக்கும்? துணைவேந்தர்களின் குடும்பங்கள் எவ்வளவு வெட்கியிருப்பார்கள்? நூற்றுக்கணக்கான கல்லூரிகளையும் லட்சக்கணக்கான மாணவர்களையும் வழிநடத்தும் துணைவேந்தர்களை தூங்கும் poseஇல் படமெடுத்து நக்கலடித்து பொறுக்கித்தனம் செய்த தினமலருக்கு என்ன சமூக அக்கறை இருக்கிறது?
இது மிகவும் முக்கியமான உதாரணம். என்னை மிகவும் பாதித்த மனம், கொதிக்கச் செய்த இன்னொரு செய்தி இது. அமெரிக்காவில் கத்தியால் குத்தப்பட்டு ஒரு இந்தியப் பேராசிரியர் இறந்த செய்தியை கீழ்க்கண்டவாறு வெளியிடுகிறது தினமலர். "அமெரிக்காவில் இந்தியப் பேராசிரியருக்கு சதக் சதக். துடிதுடித்து இறந்தார்" என்று. எவ்வளவு இரக்கமின்மை! எவ்வளவு வக்கிரம்! ஒரு உயிரிழப்பின் வலியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் லட்சணம் இதுதானா!? மரணத்தில் கூட எவ்வளவு நக்கல்?!! அந்தப் பேராசியர் குடும்பம் எவ்வளவு வருந்தியிருக்கும்? இதுதான் மனிததன்மையை காப்பாற்றுவதாக சூளுரைக்கும் பத்திரிக்கையா?
அரசியல்வாதிகளையும், No parkingயில் வண்டியை நிறுத்தும் பொதுமக்களையும் கண்டிக்கவும், படமெடுத்து போடவும் என்ன தார்மீக உரிமை இருக்கிறது இந்த தினமலருக்கு?
புவனேஷ்வரி என்ற துணைநடிகை சில நடிகைகளின் பெயரை சொல்லிவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக அந்த நடிகைகளின் படத்தையெல்லாம் பெரிதாகப் போட்டு, அந்த நடிகைகள் விபச்சாரம் செய்தார்கள் என்ற செய்தி நிரூபிக்கப்படும் முன்னரே அச்செய்தியை 'Fact'ஆக சித்தரித்து படத்துடன் செய்தி வெளியிட்ட தினமலர், அதன் முதலாளிகளில் ஒருத்தனான 'அந்துமணி ரமேஷ்' மீது நிருபர் உமா பாலியல் புகார் தெரிவித்தபோது அந்த செய்தியையும் 'Fact' ஆகவெ கருதி வெளியிட வேண்டியதானே? ஆனால் தினமலர் எபப்டி react செய்தது என கீழே பாருங்கள்.
புவனேஷ்வரி சொன்னால் உடனே எல்லா நடிகைகளும் விபச்சாரிகளாம். ஆனால் உமா என்ற நிருபர், அதுவும் தினமலர் நிருபர், அந்துமணி ரமேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சொன்னபின் அவனை மக்கள் முன் நிரபராதி ஆக்க சாம-தான-பேத-தண்ட வழிகளையெல்லாம் உபயோகித்தது தினமலர். பல தொலைக்காட்சிகளில் மிகத் தெளிவாக, நடந்த அசிங்கங்களை புட்டுப்புட்டு வைத்த அந்தப் பெண் நிருபரை, நாக்கூசாமல் மனநோயாளி என்றெல்லாம் செய்தி வெளியிட்டது தினமலர். உமா என்ற நிருபர் ஏழு வருடம் வேலை பார்த்தபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனத் தெரியவில்லையாம். புகார் அளித்தவுடன் தான் தெரிகிறதாம். ஒருகட்டத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் தினமலருக்கே பைத்தியம் பிடித்துவிட நிலையில் அது வெளியிட்ட படத்துடன் கூடிய செய்தியைக் கீழே பாருங்கள்.
மேலே உள்ள படத்தில் நிருபர் உமா தெளிவாக 'தனக்கு சேர வேண்டிய settlementகளை கொடுங்கள்' எனக் கேட்டு அந்த ராஜினாமா கடிதத்தை எழுதியுள்ளார். யாராவது தான் பணிபுரிந்த அலுவலகத்தில் இருந்து தனக்கு பணம் வரவேண்டியிருக்கும் போது, அதைக் கேட்டு அளிக்கும் ராஜினாமா கடிதத்திலேயே புகாரும் கொடுப்பார்களா? அதுவும் அந்த அலுவலகத்தின் முதலாளியே பொறுக்கித்தனம் செய்யும் போது எப்படி அவரிடமே புகாரும் கொடுக்க முடியும்? மக்கள் எதைச் சொன்னாலும் நம்புவார்கள் என்ற அபார நம்பிக்கையை தினமலர் தனக்குள் வளர்த்துக் கொண்டுவிட்டது. இதற்கு மக்களும் மூல காரணம். இந்த லட்சணத்தில் பா.கே.ப என்று வாரமலரில் பெரிய plucker போல கட்டுரை எழுதுவதும் அல்லாமல் அந்துமணி பதில்கள் என்ற தலைப்பில் ஊருக்கு உபதேசம் செய்யும் நித்யானந்தா வகையறா தான் இந்த அந்துமணி. ஒவ்வொரு வாரமும் இந்த ஆள் எழுதும் கட்டுரையில் உ.பா (உற்சாக பானமாம்.) குடித்ததைப் பற்றியும், தனக்கு அந்தப் பழக்கம் இல்லையென்றும் மறக்காமல் எழுதுவான் இந்த அந்துமணி ரமேஷ் என்ற பாலியல் குற்றவாளி.
அந்துமணி ரமேஷின் இரு முகங்கள் |
நடப்பு விஷயத்திற்கு வருகிறேன். இரண்டு நாட்களுக்கு முன்பு வைகோ இமயம் தொலைக்காட்சியில் தினமலர் தன்னைக் கேவலப் படுத்தியதைப் பற்றி வருத்தப்பட்டிருந்தார். அதாவது பொடாவில், தினமலரின் மாறாப்பாசத்தை தன்னகத்தே கொண்டே ஜெயலலிதா தன்னை சிறையில் தள்ளிய போது தன்னைப் பற்றிய பயோடேட்டாவை வெளியிட்ட தினமலர், கூடவே, "வைகோவுக்கு மிகவும் பிடித்த உணவு ஆட்டுக்கறி. ஆனால் சிறையில் அது போடப்படுவதால் வைகோவுக்கு மகிழ்ச்சிதான்" என தன் திமிர்த்தனத்தைக் காட்டியிருந்ததாகவும், அதனால் தான் மிகவும் வேதனை உற்றதாகவும் பேசியிருந்தார் வைகோ.
தொலைக்காட்சியில் தன் மானம் போனதை உணர்ந்த தினமலர் உடனே அடுத்தநாள் கீழ்க்கண்டவாறு செய்தி வெளியிடுகிறது, "வைகோ என்ற நல்லவர் தேர்தலை புறக்கணித்ததால் மக்களுக்கு தான் நஷ்டம்" என்று நல்லவிதமாக நடிக்கிறது. எப்படிப்பட்ட கேவலமான பத்திரிக்கை பாருங்கள்.
வைகோ நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் சொல்ல தினமலர் யார்? மக்கள் தினமலரிடம் கருத்தா கேட்டார்கள்? வைகோவின் செயல்களையும், பேச்சுக்களையும், நடவடிக்கைகளையும் மட்டும் அப்படியே வெளியிடுவதுதானே உன் வேலை? அதையெல்லாம் படித்து வைகோ மீதான கருத்தை மக்கள் உண்டாக்கிக்கொள்வார்கள். ஆனால் பெரிய Inception படத்தின் கதாநாயகன் போல மக்கள் மூளையில் கருத்துக்களைப் பதியச் செய்கிறது இந்த தினமலர்.
வாசகர் கடிதம் என்ற பெயரில் தானே எழுதி ஒவ்வொரு பெயரில் வெளியிடும் கீழ்த்தரமான செயலையும் தினமலர் பல ஆண்டுகளாக செய்தே வருகிறது! அதற்கு ஆதாரம் கீழே! தினமலரிலும், காலைக்கதிர் என்ற தினமலர் குழுமத்தின் மற்றொரு பத்திரிக்கையிலும் வெவ்வேறு பெயர்களில் வெளிவந்த ஒரே கடிதம்!
பத்திரிக்கை என்றால் செய்தியைச் சொல்வதா? கருத்தைச் சொல்வதா? செய்தித்தாள் எனச் சொல்கிறோமா? கருத்துத்தாள் எனச் சொல்கிறோமா? தினமலர் காலம்காலமாக செய்வது இதைத்தான், அதாவது செய்திகளை தனக்கு வேண்டிய பாணியில் அல்லது தொனியில் போட்டுவிட்டு அதனுடன் சேர்த்து நஞ்சு தடவிய தன் கருத்தையும் மக்கள் மனதில் திணித்துவிடுகிறது. தினமலருக்கு கைவந்த கலை இது.
இது போன்ற சமூகப்பொறுப்புணர்வே இல்லாத பத்திரிக்கைகளை மக்கள் கண்டிப்பாய் இனங்காண வேண்டும். ஒரு பத்திரிக்கையின் பணி என்பது உண்மையான செய்தியை மக்களிடம் அளித்துவிட்டு, அச்செய்தி பற்றிய கருத்தை மக்களே சிந்தித்து உண்டாக்கிகொள்ள வழிவகுப்பதேயன்றி விஷக்கருத்துக்களையும், நஞ்சுப் பரப்புரைகளையும் மக்கள் மனதில் பதிய வைப்பதல்ல. தினமலரை கண்டிப்பாகப் புறக்கணிக்கும் கடமை நமக்கு இருக்கிறது. ஊடகப் புல்லுருவிகளை சுத்தப்படுத்தினால் மட்டுமே நாடு சுத்தப்படும்.
SOURCE: http://chennaipopularfront.blogspot.com/2011/09/blog-post_10.html
0 கருத்துரைகள்:
Post a Comment