டெஹ்ரான்:ஈரானின் முன்னால் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அலிரெசா அஸ்காரியை இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாத் அமைப்பு தான் துர்கியிலிருந்து இஸ்ரேலுக்கு கடத்தி சென்றுள்ளது என்று பல்வேறு ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளதாக ஈரானின் துணை பாதுகாப்பு அமைச்சர் ஹோசைன் டகிகி தெரிவித்துள்ளார். அஸ்காரி கடத்தப்பட்டு ஆறாவது நினைவு ஆண்டை ஒட்டி அவர் இவ்வாறு தெரிவித்தள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு அஸ்காரி துர்கியிலிருந்து மாயமானார். அவரை துர்கியில் உள்ள அமெரிக்க ராணுவதளம் வழியாக இஸ்ரேல் கடத்தி சென்றிறுக்கலாம் என்று நம்பப்பட்டு வந்தது.
மேலும் கடந்த டிசம்பர் 2010 ஆம் ஆண்டு இஸ்ரேலின் இணையத்தளமான ஓய்நெட் இஸ்ரேலின் அயலான் சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து யூரேசியா என்னும் இணையத்தள பத்திரிக்கை இறந்தவர் அஸ்காரி என்று தங்களுக்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து தகவல் கிடைத்ததாகவும் எனவே இது தற்கொலையள்ள கொலையாக இருக்கலாம் என்றும் கூறியது.
இதனைத் தொடர்ந்து ஈரான் ஐநாவிடமும் செஞ்சிலுவைச் சங்கத்திடமும் அஸ்காரிக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டது. ஈரானின் முயற்சிகளைத் தொடர்ந்து இதுவரை முன்னால் பாதுகாப்புத்துறை அமைச்சரைக் குறித்து புதிய தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று டகிகி கூறியுள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment