Saturday, November 17, 2012

அனைத்து குருபூஜை நிகழ்ச்சிகளுக்கும் தடைவிதிக்க வேண்டும்- SDPI வலியுறுத்தல்


தருமபுரியில் தலித் மக்கள் மீது ஜாதிய வன்முறை நடத்தப்பட்டதை கண்டித்தும், தென் மாவட்டங்களில் நடைபெற்ற கலவரங்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ கட்சி) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னையில் இன்று(16.11.2012) மாலை மெமோரியல் ஹால் முன்பு நடைபெற்றது.
கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வரவேற்றார். வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்ட தலைவர் முகம்மது உசேன், காஞ்சி மாவட்ட தலைவர் முகம்மது பிலால், திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விசிக மாநில பொதுச் செயலாளர் ரவிக்குமார், கேரளா எஸ்.டி.பி.ஐ மாநில பொதுச்செயலாளர் மனோஜ் குமார், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில துணைத் தலைவர் முகம்மது இஸ்மாயில் , தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் நாஞ்சில் செய்யதலி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவில் தமது உரையில்,
அநீதிகளுக்கும், அநியாயங்களுக்கும் எதிராக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறது. எந்த சமுதாயத்திற்கு எதிராக இது நடந்தாலும் எஸ்.டி.பி.ஐ கட்சி குரல் கொடுக்கும். போராடும்.
அந்த வகையில்தான் இன்று தென் மாவட்டங்களில் அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தியும், தர்மபுரியில தலித் கிராமங்கள் தாக்கப்பட்டு முற்றிலுமாக சூறையாடப்பட்டதைக் கண்டித்தும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தர்மபுரியில் தலித் கிராமங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இது ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடு. தீண்டாமையின் ஒரு பகுதியாகும். நாங்கள் நேரடியாக அந்த பகுதிகளை பார்வையிட்ட போது மக்களின் துயரங்களையும், கண்ணீரையும் பார்க்க முடிகிறது.
காவல்துறையின் கண்காணிப்பு பகுதியான அப்பகுதியில் காவல்துறைக்கு தெரியாமல் எப்படி இந்த தாக்குதல்கள் நடைபெற்றன. காவல்துறை இதற்கு பொறுப்பேற்க வேண்டும். தாக்குதலுக்கு பிறகு காவல்துறை கண்காணிப்பாளரின் நடவடிக்கை சரியான முறையில் உள்ளது. மேலும் உறுதியாக இந்த நடவடிக்கை தொடரவேண்டும்.
அப்பாவிகளை விட்டுவிட்டு காரணமானவர்களை கண்டறிந்து கைது செய்வதோடு இழப்பீட்டை அவர்களிடம் இருந்தே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza