இராமநாதபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிடக் கோரி எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக இன்று (14-11-2012) காவல்துறை ஏ.டி.ஜி.பி யிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 30 தேவர் குரு பூஜையின்போது நடந்த அசம்பாவித சம்பவங்களை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பதற்றமும், முஸ்லிம்கள் மீதான வன்முறையும் நடந்தேறியுள்ளது. முஸ்லிம் வியாபாரிகளுக்கு சொந்தமான வியாபார தலங்கள் லட்சக்கணக்கில் சேதப்படுத்தப்பட்டன. இரு சாதியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சமூக விரோதிகள் மதக்கலவரமாக மாற்ற முயற்சித்து வருகின்றனர்.
இதைப்போலவே கடந்த 7ம்தேதி அன்று மேட்டுப்பாளையத்தில் நடந்த அசம்பாவிதத்தை தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, கோவை கரும்புக்கடையைச் சார்ந்த அப்துல் ரகீம் மற்றும் முஸ்லிம்கள் சிலர் இந்துத்துவ சக்திகளால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டனர். முஸ்லிம்களின் வியாபாரத் தலங்கள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இராமநாதபுரம் மற்றும் கோவை மாவட்டங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக 1997 – 98 ம் ஆண்டுகளில் நடந்த மதக்கலவரத்தைப் போல மீண்டும் மத மோதல்களை உருவாக்க இந்துத்துவ சக்திகள் முயற்சித்து வருகின்றன.
எனவே தமிழக காவல்துறை நேரடியாக தலையிட்டு இது போன்ற அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு முஸ்லிம்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடவும், சமூக விரோதிகளின் மீது கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் தமிழக கூடுதல் காவல்துறை இணை இயக்குநர் திரு. ராஜேந்திரன் அவர்களிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பி. அப்துல் ஹமீது தலைமையில் வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, செயலாளர் எ.கே. கரீம் மற்றும் பசுலுர் ரஹ்மான் ஆகியோர் நேரில் சந்தித்து மனுவை கொடுத்தனர்
0 கருத்துரைகள்:
Post a Comment