நேற்று(30.10.2012) நடைபெற்ற பசும்பொன் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு நடந்த மோதல் சம்பவங்களும் கலவரங்களும் வருந்தத்தக்கது. கண்டனத்திற்குரியது. இராமநாதபுரம் மாவட்டத்திலும் இதர மாவட்டங்களிலும் கலவரம் பரவாமல் தடுக்க உரிய உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
அதே சமயம் நடைபெற்ற சாதிக்கலவரத்தை மதக்கலவரமாக -இந்து முஸ்லிம் பிரச்சனையாக மாற்றும் சதித்திட்டம் இராமநாதபுரத்தில் நடைபெற்றுள்ளது.
இராமநாதபுரம் பஜாரில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை ஒரு கும்பல் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளது .இது வன்மையாக கண்டிக்கத்தக்கது .இதன் பின்னணியில் உள்ள அமைப்புகள் எவை, தூண்டியவர்கள் மற்றும் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் .அதோடு மேற்கொண்டு எந்த விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெறாமல் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும் அவர்களின் வியாபார நிறுவனங்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறேன்.
நகல்:
உள்துறை செயலாளர்
தலைமை செயலாளர்
காவல்துறை இயக்குனர்
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட ஆட்சி தலைவர்
தலைமை செயலாளர்
காவல்துறை இயக்குனர்
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
மாவட்ட ஆட்சி தலைவர்
ஆகியோர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் .ஃபேக்ஸ் மூலமாகவும் SDPI மாநில தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment