Thursday, November 1, 2012

ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் சென்ற படகு மூழ்கியது! – 122 பேரை காணவில்லை!


டாக்கா:பங்களாதேஷ் கடல் எல்லையை ஒட்டிய வங்காள விரிகுடாவில் பயணிகள் படகு மூழ்கியதில் 122 பேர் காணாமல் போயுள்ளனர்.
 மியான்மரில் புத்த தீவிரவாதிகள் நடத்தும் கலவரத்தால் புலன்பெயர்ந்து மலேசியாவுக்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் சென்றுக் கொண்டிருந்த படகுதான் மூழ்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.
மீனவ தொழிலாளிகள் மீட்ட ஆறுபேரில் ஒருவர் நடந்த சம்பவத்தை வங்காளதேச கடலோர படையிடம் விவரித்தார். வேலை வாங்கித் தருவதாக கூறி ஆட்களை மலேசியாவுக்கு கொண்டு செல்லும் படகுதான் விபத்தில் சிக்கியதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

 70 பேர் செல்லும் படகில் 128 பேர் ஏற்றப்பட்டுள்ளனர். படகின் அடிப்பகுதி பாறையில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. ஆழ்கடலில் இறந்த உடல்களை கண்டதாக மீனவ தொழிலாளர்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza