ஹைதராபாத்:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த ஆந்திர போலீசுக்கு எதிராக ஹைதராபாத் நகரத்தில் பிரம்மாண்ட எதிர்ப்பு பேரணி நடத்தப்பட்டது. தேச அளவிலான ‘பாப்புலர் ஃப்ரண்ட் ஏன்?’ என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆந்திர மாநிலம் குர்னூலில் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். இதனை கண்டித்து கண்டனப்பேரணி நடத்தப்பட்டது.
ஹைதராபாத்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பல்லாரி சவுரஸ்தாவில் கண்டனப் போராட்டம் நடந்தது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் ஷேக் அப்துல் சுப்ஹான், பொதுச்செயலாளர் டி.எஸ்.ஹபீபுல்லாஹ், தலித் தலைவரும் சோசியல் ஜஸ்டிஸ் ஃப்ரண்டின் மாநில கன்வீனருமான வழக்கறிஞர் ஒய்.கொட்டேஷ்வர ராவ், மனித உரிமை ஆர்வலர் பத்மஜா, பேராசிரியர் நெல்ஸன் பால், அகில இந்திய பிற்படுத்த்தப்பட்ட நல இயக்கத்தின் தலைவர் கதலீ சிந்த ராவ், பகுஜன் சமாஜ் மாவட்ட பொதுச் செயலாளர் சத்ய கிருஷ்ண உள்ளிட்ட தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நேற்று(திங்கள் கிழமை) மாலை 6.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது. முஸ்லிம்-தலித்-பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படும் அமைப்புதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்று கொட்டேஷ்வர ராவ் கூறினார். பாப்புலர் ஃப்ரண்டின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீஸ் நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக கொட்டேஷ்ரவராவ் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment