Tuesday, November 13, 2012

எகிப்தில் ஹிஜாப்புடன் விமானப் பணிப்பெண்கள்


எகிப்தின் வரலாற்றில் முதல் முறையாக ஹிஜாப்புடன் விமானப் பணிப்பெண்கள்

எகிப்து விமான பணிப்பெண்கள் எகிப்தின் விமான சேவை வரலாற்றில் முதல் முறையாக ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டுள்ளனர் . எகிப்தில் பெண்கள் தொலைக்காட்சி நிகழ்சிகளில் ஹிஜாப்புடன் தோன்றுவதற்கும் , எகிப்திய விமான பணிப்பெண்கள் விமானத்தில் ஹிஜாப் அணிந்து கடமைபுரியவும் இருத்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளது .

1932 ஆம் ஆண்டு எகிப்தின் விமான சேவை இஸ்
தாபிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்து ஹிஜாபுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை எகிப்தின் மக்கள் எழுச்சியின் பின்னர் வந்துள்ள ஜனாதிபதி முர்ஷியின் அரசாங்கம் முற்றாக நீக்கியுள்ளது .

கடந்த செப்டம்பரில் எகிப்து விமான பணியாளர்கள் எகிப்தின் பெரும்பாலான பெண்களைபோன்று தமக்கும் ஹிஜாப் அணியும் உரிமை வழங்கப்படவேண்டும் என்று கோரி பணி புறக்கணிப்பில்  ஈடுப்பட்டிருந்தனர் அதை தொடர்ந்து எகிப்தின் விமான சேவை நிறுவனம் ஹிஜாபுக்கான தடையை நீக்கியுள்ளது .

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza