குவஹாத்தி:ரிஹாப் இந்தியா பவுண்டேசன் சார்பாக அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2-வது கட்டமாக வீடுகளை வழங்கும் நிகழ்ச்சியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் துவக்கி வைத்தார். போகைகானில் ஹபாஸரா கிராம பஞ்சாயத்தில் ரிஹாபின் மாதிரி கிராமத்தில் கட்டப்பட்ட 31 வீடுகள் அளிக்கபட்டன.
ரிஹாப் அஸ்ஸாம் மாநில தலைவர் இனாமுத்தீன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் டாக்டர் பஸர், ஹபாஸரா கிராம பஞ்சாயத்து தலைவர் மும்தாஜ் பேகம், என்.சி.ஹெச்.ஆர்.ஓ.தேசிய பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஏ.முஹம்மது யூசுஃப், அகில இந்திய இமாம்ஸ் கவுன்சில் தேசிய செயலாளர் அ.ஷாஹுல் ஹமீது பாகவி, சொசைட்டி ஃபார் டோட்டல் எம்பவர்மெண்ட் ஆஃப் மைனாரிட்டீஸ் பிரதிநிதி டாக்டர் ஷேக் ஹஸ்ரத் அலி அஹ்மத் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
வீடுகளுக்கான சாவிகளை இ.எம்.அப்துற்றஹ்மான் வழங்கினார். இதுவரை 60 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.மேலும் அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட ரிஹாப் சார்பாக 4-வது கட்டமாக அத்தியாவசியப் பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பொருட்களை இ.எம்.அப்துற்றஹ்மான் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கினார். சிராங் அகதிகள் முகாமில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது
0 கருத்துரைகள்:
Post a Comment