Saturday, November 3, 2012

சீனாவில் ஒரு குழந்தை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தல்!


பீஜிங்:சீனாவில், "ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு வர வேண்டும்' என, அந்நாட்டின் மேம்பாட்டு ஆய்வு அமைப்பு வலியுறுத்தியுள்ளது.உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. ஜனத்தொகையை கட்டுப்படுத்த, அந்நாட்டில் ஒரு குழந்தை மட்டுமே பெற்று கொள்ள வேண்டும், என்ற சட்டம் அமலில் உள்ளது.இது குறித்து, சீன மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

சீனாவில், ஜனத்தொகையை கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தில் நாடு முன்னேற வேண்டும், என்ற நோக்கில் தான், ஒரு குழந்தை திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால், ஏராளமான குடும்பத்தினர், பல தியாகங்களை செய்துள்ளனர்.தற்போது நிலைமை வேறு. பொருளாதாரத்தில் முன்னேறியுள்ளோம். இனியும் இந்த கொள்கை பின்பற்றப்பட்டால், 2050ம்ஆண்டில், நம்நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை தான் அதிகமாக இருக்கும். எனவே, இரண்டு குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளும், நடைமுறையை, அரசு பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு சீன மேம்பாட்டு ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அடுத்த வாரம், நடைபெற உள்ள, சீன கம்யூனிஸ் கட்சி மாநாட்டில், இந்த அறிக்கை ஆய்வு செய்யப்படும் என, எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza