Saturday, November 3, 2012

பிலிப்பைன்சின் மின்டானோ தீவில் பயங்கர நில நடுக்கம்!


மணிலா: பிலிப்பைன்சில் இன்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர். பிலிப்பைன்சின் தென் பகுதியில் உள்ள மின்டானோ தீவு பகுதியில் இன்று அதிகாலை 2.17 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.1 புள்ளி பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஆனால், பிலிப்பைன்ஸ் புவியியல் மற்றும் கடலாய்வு நிறுவனம் கூறுகையில், '6.5 ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவாகி உள்ளது. அதனால் தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்று அறிவித்தது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.


இந்த பூகம்பத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. உள்ளூர் மக்கள் கூறுகையில், 'பூகம்பத்தால் வீடுகள் குலுங்கின. பொருட்கள் கீழே விழுந்தன. ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின' என்கின்றனர். கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி 7.1 ரிக்டர் அளவில் பிலிப்பைன்சில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒருவர் பலியானார். ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இன்று அதிகாலை மீண்டும் பூகம்பம் ஏற்பட்டதால் மக்கள் பீதியில் விடிய விடிய தூங்காமல் உள்ளனர். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza