Friday, November 9, 2012

ராமன் மோசமான கணவன், லஷ்மணன் மோசமான தம்பி : ராம் ஜெத்மலானி கருத்து


ராமன் மோசமான கணவன், லஷ்மணன் மோசமான தம்பி : ராம் ஜெத்மலானிபுது தில்லி : ராமர் கோவில் விவகாரத்தை வைத்தே ஆட்சியை பிடித்த பி.ஜே.பியினருக்கு சங்கடத்தை உண்டாக்கும் வகையில் பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினர் ராம் ஜெத்மலானி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண் – பெண் உறவு குறித்த புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் பேசிய ராம் ஜெத்மலானி “ ராமனை எனக்கு பிடிக்காது. அவன் மோசமான கணவன். யாரோ சில மீனவர்கள் சொன்னதற்காக அபலை பெண்ணான சீதையை காட்டுக்கு அனுப்பி விட்டான்” என்று சொன்னார்.


மேலும் ராமனின் தம்பி லஷ்மணன் ராமனை விட மோசமானவன் என்று சொன்ன ராம் ஜெத்மலானி “ சீதை ராவணனால் தூக்கி செல்லப்பட்ட போது ராமன் தன் தம்பி லஷ்மணனை சீதையை கண்டு பிடிக்க ஏவுகிறான். ஆனால் லஷ்மணனோ தன் அண்ணியின் முகத்தை பக்தியின் காரணத்தால் இது வரை பார்த்ததில்லை என்பதால் தன்னால் சீதையை கண்டு பிடிக்க முடியாது “ என்று கூறி சீதையை தேடும் பொறுப்பிலிருந்து நழுவி விட்டதாக குற்றம் சாட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza