உலக வரைபடத்தில் நிறவெறியால் புறக்கணிக்கப்பட்ட கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு மகுடம் சூட்டும் வகையில் பெயரிலேயே நிறவெறியைக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் மாளிகையான ‘வெள்ளை மாளிகையின்’ படிக்கட்டுகளில் மீண்டும் ஒபாமா அதிபராக ஏற உள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே கறுப்பு இனத்தைச் சார்ந்த ஒருவர் 2-வது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றிப்பெறுவது இதுவே முதல் தடவை.
அமெரிக்காவின் 44-வது அதிபராக கடந்த முறை தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பே அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்தவர் பாரக் ஒபாமா.
1961-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி ஹவாய் தீவில் ஹெனோலூலுவில் ஒபாமா பிறந்தார். கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் லா ஸ்கூல் ஆகிய கல்வி கலாச் சாலைகளில் இருந்து பட்டங்களை பெற்றார். சட்டத்தில் பட்டம் பெறும் முன்பு சிக்காகோவில் கம்யூனிட்டி ஆர்கனைசராக பணியாற்றியவர். சிகாகோ சிவில் ரைட்ஸ் அட்டர்னி மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1997, 2004, 2012 ஆகிய வருடங்களில் டெமோக்ரேட்க் பார்டியின் இல்லினோய் செனட் உறுப்பினராக தொடர்ச்சியாக தேர்வுச்செய்யப்பட்டுள்ளார். இக்கால அளவில் தனது செயல்பாடுகளால் ஒபாமா தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தார். வாய்ச்சவடால்களும், மேனரிஸமும் கொண்ட ஒபாமாவுக்கு தேசிய அளவில் மக்களை தம் பக்கம் ஈர்க்க அதிகம் சிரமம் ஏற்படவில்லை. 2008-ஆம் ஆண்டு அதிபர் வேட்பாளர் போட்டியில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்த ஒபாமா, உலக அளவில் பிரசித்திப் பெற்றார்.
அதே ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், எதிர் வேட்பாளர் ஜான் மெக்கய்னை தோற்கடித்து அமெரிக்காவின் அதிபரானார். 2009 ஜனவரி 20-ஆம் தேதி அமெரிக்க வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த தினமாக மாறியது.”வெள்ளை மாளிகை கறுப்பு நிறுத்தவரின் காலடியில்” என்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. சமாதானத்திற்கான நோபல் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆப்கானிஸ்தானிற்கு கூடுதல் படைகளை அனுப்பிய கையோடு அமைதிக்கான நோபல் பரிசு ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
முக்கியத்துவம் வாய்ந்த நிர்வாக சீர்திருத்தங்கள் மூலமாக அமெரிக்கர்களை தம் வசம் ஈர்க்க ஒபாமாவில் முடிந்தது. குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் அமெரிக்கா சிக்கி தவித்த வேளையில் உத்வேகம் அளிக்கும் திட்டங்களை தீட்டி அமெரிக்க பொருளாதார கட்டமைப்பை ஸ்திரப்படுத்த ஒபாமா காட்டிய துணிச்சல் அனைவரது பாராட்டையும் பெற்றது. 2009-ஆம் ஆண்டு அமெரிக்கன் ரிகவரி அண்ட் ரீ இன்வெஸ்ட்மெண்ட் ஆக்ட், வரி விலக்குகள், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்க சீர்திருத்தங்கள், 2010-ஆம் ஆண்டு ஜாப் க்ரியேஷன் ஆக்ட் ஆகியன ஒபாமாவின் முக்கிய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் ஆகும்.
நோயாளிகளுக்கு முன்னுரிமை வழங்கும் பேசியண்ட் ப்ரொடக்ஷன் அண்ட் அஃபார்டபிள் ஆக்ட், வால்ஸ்ட்ரீட் ரிஃபார்ம் அண்ட் கன்ஸ்யூமர் ப்ரொடக்ஷன் ஆக்ட், பட்ஜெட் கண்ட்ரோல் ஆக்ட் ஆகியனவும் ஒபாமாவின் சீர்திருத்த நடவடிக்கைகளில் அடங்கும். ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெற்றது உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் ஒபாமாவிற்கு பாராட்டை பெற்றுத்தந்தது, உஸாமா கொலை நாடகம், லிபியாவில் தலையீடு போன்ற சம்பவங்கள் சர்வதேச அளவில் ஒபாமாவுக்கு விமர்சனங்களை பெற்றுத்தந்தாலும், அமெரிக்க மக்களிடையே அவரது செல்வாக்கை குறைக்கவில்லை.
பிரச்சார மேடைகள் தோறும் குடும்பத்துடன் தோன்றிய ஒபாமா,மக்களை கவர்ந்தார். இயற்கைக்கு முரணான ஓரினச் சேர்க்கை திருமணத்திற்கு சட்டரீதியான அந்தஸ்து அளித்தது மூலம் ஒபாமா மனித குலத்திற்கே இழிவைப் பெற்றுத்தந்தார். ஆனாலும், அமெரிக்கர்களுக்கு இந்த கலாச்சார சீரழிவுகள் எல்லாம் பெரியம் விஷயம் அல்லவே.
0 கருத்துரைகள்:
Post a Comment