அமெரிக்க கடற்படையினர் அத்துமீறல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஈரான் புகார் கூறியுள்ளது. தமது வான் பரப்பில் அனுமதியில்லாமல் அமெரிக்க உளவு விமானங்கள் பறக்க விடப்படுவதாகவும் ஐ.நா.விடம் புகார் தெரிவித்துள்ளது ஈரான்.
ஐ.நா.வுக்கான ஈரானிய தூதர் மொஹமெட் கசாயி, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனிடம் இது தொடர்பான புகார் கடிதத்தை கொடுத்து, நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். பெர்சியன் கடல், மற்றும் ஓமான் கடல் பகுதிகளில் அமெரிக்க கடற்படையின் அத்துமீறல்கள் நடைபெறுவதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஈரானின் கடற்கரை நகரமான புஷேஹ்ர் மேலாக கடந்த அக்டோபரில் மட்டும் 7 தடவைகள் அமெரிக்க உளவு விமானங்கள் பறந்ததாகவும், இறுதியாக கடந்த நவம்பர் 1-ம் தேதி அமெரிக்க உளவு விமானம் தென்பட்டதாகவும் புகார் கூறியுள்ளது ஈரான்.
முறைப்படி செய்யப்பட்டுள்ள இந்த புகார் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்காவிட்டால், அதனால் ஏற்படப்போகும் பின் விளைவுகளுக்கு தாம் பொறுப்பு அல்ல எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘பின் விளைவு’ என்றால், அமெரிக்க உளவு விமானங்கள் தரையில் இருந்து விமான எதிர்ப்பு ஏவுகணைகளால் சுட்டு வீழ்த்தப்படும் என்று அர்த்தம்
0 கருத்துரைகள்:
Post a Comment