Tuesday, November 27, 2012

டிசம்பர் 6 ஐ பாசிஸ எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்க பாப்புலர் ப்ரண்ட் முடிவு



பாபரி மஸ்ஜித் இடிப்பின் 20வது ஆண்டை தேசிய அளவில் பாசிஸ எதிர்ப்பு தினமாக அனுஷ்டிக்க பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா முடிவு செய்துள்ளது . "என்றும் நம் நினைவில் பாபரி மஸ்ஜித் " என்ற கருத்தை மையப்படுத்தி பொதுக்கூட்டங்கள் நடத்துவது , துண்டுபிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் போஸ்டர் பிரச்சாரம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது .

பாபரி மஸ்ஜிதை மீண்டும் கட்டக் கோரியும் , மஸ்ஜித் இடிப்பில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிக்கக் கோரியும் அன்றைய தினம் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடைபெறும் . இதில் பாப்புலர் ப்ரண்டின் தேசிய தலைவர் இ .எம். அப்துர் ரஹ்மான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றுவார்கள் .


அயோத்தியில் 463 ஆண்டு கால பழமையான , முஸ்லிம்களின் இறையில்லமான பாபரி மஸ்ஜிதை பாசிஸ இந்துத்வ சக்திகள் இடித்தார்கள் . நமது நாட்டின் கொள்கைகளும் , கோட்பாடுகளும் இத்துடன் இடிக்கப்பட்டன . இச்சம்பவத்தில் அரசாங்கம் ஒரு மௌன பார்வையாளர்களாக மாறியது ; நாட்டின் சட்டங்கள் காகிதத்தில் எழுதப்பட்ட வெறும் எழுத்துக்களாகின. நீதித்துறை முற்றிலும் செயலற்ற துறையானது . மகாத்மா காந்தியின் படுகொலைக்கு பிறகு சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட மிகப்பெரும் தீவிரவாத தாக்குதல் இதுதான். அன்றைய தினம் உலக சமூகத்தின் முன்னிலையில் நமது நாடு வெட்கி தலைகுனிந்து நின்றது .

420 ஆண்டுகளுக்கும் அதிகமாக முஸ்லிம்கள் இறையில்லமாக பயன்படுத்தி வந்த இந்த மஸ்ஜிதை இடித்ததன் மூலம் பல நூற்றாண்டுகளாக தேசத்தின் மீதிருந்த கறையை போக்கியதாக சங் பரிவார் கூறியது . முஸ்லிம்கள் இந்திய ஜனநாயகத்தின் கறைகள் என்பது தான் இதன் அர்த்தம் . ஆக இது வெறும் ஒரு மஸ்ஜித் இடிப்பு விவகாரம் மட்டுமல்ல சிறுபான்மை முஸ்லிம் சமூகத்தை அச்சுறுத்தும் அவர்களின் திட்டத்தின் ஒரு பகுதியாகும் . மஸ்ஜித் இடிப்பிற்கு பிறகு தேசம் முழுவதும் நடத்தப்பட்ட முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் அவர்களின் இலட்சியத்தை தெளிவுப்படுத்தின .

ஆர். எஸ். எஸ் , விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாரதிய ஜனதாவின் தலைவர்கள் தான் இதன் முக்கிய குற்றவாளிகள் என்றாலும் வேறு பலரும் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர் . அப்போதைய பிரதமர் , இந்திய அரசாங்கம், நீதித்துறை , இராணுவம் , ஊடகம் , அனைத்து அரசியல் கட்சிகள் , அனைத்து தலைவர்கள் ஆகிய அனைவரும் இதில் பங்காற்றியுள்ளனர் . இந்த துயர சம்பவத்திலிருந்து பாடம் படிக்கவும் அவர்கள் தவறிவிட்டனர் . இருபது ஆண்டுகள் கடந்து விட்டன . மஸ்ஜித் இடிக்கப்பட்டவுடன் திரும்ப கட்டித் தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதி இன்று வரை நிறைவேற்றப்படாதது , இந்த வாக்குறுதி ஒரு மிகப் பெரும் பொய் என்பதை உணர்த்துகிறது . மஸ்ஜிதை மீண்டும் கட்டுவதும் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தண்டிப்பதும் தான் நீதியை நிலைநாட்டும் . இலட்சக்கனக்கான முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத குடிமக்களிடம் இது நம்பிக்கையை ஏற்படுத்தும். ஏராளமான அறிவு ஜீவிகள் , மதச்சார்பற்ற தலைவர்கள் , ஊடகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இடிப்பை தொடர்ந்து இக்கருத்தை தெளிவாக பதிவு செய்தனர் .

இப்பிரச்சினையில் கீழ்க்கண்ட மூன்று விஷயங்கள் இறுதி தீர்ப்பிற்காக நீதிமன்றங்களில் இன்னும் நிலுவையில் உள்ளன .

1. மஸ்ஜித் மற்றும் சுற்றுப்புறங்கள் உரிமை சம்மந்தமாக 1961ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு - மூன்று பிரிவினருக்கும் நியாயமற்ற முறையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரித்து கொடுத்த பிறகு தற்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது .

2. மஸ்ஜித் இடிப்பிற்கு காரணமான குற்றவாளிகள் மீது 1992ல் பதிவு செய்யப்பட கிரிமினல் வழக்குகள் - எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல் அனைத்து குற்றவாளிகளும் தண்டனை பயமின்றி சுதந்திரமாக சுற்றி வருகின்றனர் .

3. மஸ்ஜித் இடிப்பை விசாரித்த நீதிபதி.லிபர்ஹான் கமிஷன் அறிக்கையின் மீது அரசாங்கம் எடுத்த நடவடிக்கை - சம்பவத்திற்கு காரணமானவர்கள் என்று கமிஷன் சுட்டிக் காட்டியவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்க ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயாராக இல்லை .

முஸ்லிம்களிடம் பாபரி மஸ்ஜிதை மறந்து விடுமாறு கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்ற செயல் என்பதை பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மத்திய காரிய கமிட்டி நினைவூட்டுகிறது . முஸ்லிம்கள் மட்டுமல்ல , இந்த தேசத்தின் ஒவ்வொரு குடிமகனும் பாபரி மஸ்ஜிதை மறக்க மாட்டான் . அதனை மறப்பதென்பது வகுப்புவாத மற்றும் பாசிஸ சக்திகளின் வளர்ச்சிக்கு தான் துணை புரியும் . 20 ஆண்டு கால துரோகத்தை நமது நாடு கண்டு வருகிறது . இதுவரை மறுக்கப்பட்ட நீதி இனியும் தாமதிக்க கூடாது என்று பாப்புலர் ப்ரண்ட் கேட்டுக் கொள்கிறது . சிறுபான்மை சமூகம் , மனித சமூகம் மற்றும் தேசத்திற்கெதிராக நிகழ்த்தப்பட்ட குற்றமான பாபரி மஸ்ஜித் இடிப்பின் 20வது ஆண்டில் நீதிக்காக ஒன்றிணைந்து போராடுமாறு அனைத்து இந்தியர்களுக்கும் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மத்திய காரிய கமிட்டி அழைப்பு விடுக்கிறது.

Anti Fascist Day Deceber 6

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza