Monday, November 26, 2012

இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பர்தா அணிந்து உரை !


Sumaiya Karim, wearing hijab speaks in British Parliamentபிரித்தானிய நாடாளுமன்றத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாப் அணிந்து உரையாற்றிய மாணவி அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார்.

பிரிட்டிஷ் நாடு தேர்தல் ஜனநாயகத்தின் தாயகம் என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டில், மாணவர்கள், இளைஞர்களிடையே ஜனநாயக ஆர்வத்தைத் தூண்டவும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில்  இளைஞர்களின் பிரச்னைகள் குறித்து உரையாற்றவும்  தேர்ந்தெடுக்கப்படும் சில இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதுண்டு. 
இளைஞர் நாடாளுமன்றம் என்றழைக்கப்படும் இந்நிகழ்வுகளில் 11 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் ஜனநாயக முறைப்படி தெரிவு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
அவ்வகையில், மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்காம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமையா கரீம் என்கிற 16 வயது மாணவி பிரித்தானிய இளைஞர் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய விதம் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தலை மற்றும் கழுத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப் (பர்தா) அணிந்த வண்ணமே மாணவி  சுமையா உரை நிகழ்த்தினார். இதன்மூலம் பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்து  உரையாற்றிய முதல் பெண்ணாக சுமையா திகழ்கிறார்.

source: inneram

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza